PUBLISHED ON : ஜன 27, 2020

1) இந்தியா சார்பில், நிலவுக்கு அனுப்பப்பட உள்ள மனித வடிவிலான ரோபோவின் பெயர் என்ன?
அ) வாயுமித்ரா
ஆ) சந்திரமித்ரா
இ) வயோம்மித்ரா
ஈ) சந்திரபதி
2) தமிழக ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையில் பொருள் வாங்கலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது?
அ) மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும்
ஆ) மாவட்டத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும்
இ) இந்தியாவில் உள்ள எந்த ரேஷன் கடையிலும்
ஈ) தாலுகாவில் உள்ள எந்த ரேஷன் கடையிலும்
3) டில்லியில் குடியரசு தினவிழாவில், கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்திய தமிழகப் பெண் அதிகாரியின் பெயர் என்ன?
அ) உதவி கமாண்டன்ட் தேவிகா
ஆ) உதவி கமாண்டன்ட் ரேகா
இ) உதவி கமாண்டன்ட் பிரிசில்லா
ஈ) உதவி கமாண்டன்ட் ரேணுகா
4) நடப்பாண்டு, தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை
அ) 20 சதவீதம் அதிகரிப்பு
ஆ) 16 சதவீதம் குறைவு
இ) 10 சதவீதம் அதிகரிப்பு
ஈ) 10 சதவீதம் குறைவு
5) கடந்த வாரம், சென்னையில் தமிழக அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட தொழில்நுட்ப பூங்காவின் திட்ட மதிப்பு என்ன?
அ) ரூ.1,500 கோடி
ஆ) ரூ. 2,500 கோடி
இ) ரூ. 3,500 கோடி
ஈ) ரூ. 5,000 கோடி
6) கொரோனா வைரஸ் எதிலிருந்து பரவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்?
அ) வௌவால்
ஆ) பன்றி
இ) வெட்டுக்கிளி
ஈ) பாம்பு
7) 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்கான கிரிக்கெட் போட்டியில், முதன்முறையாக எந்த நாட்டைச் சேர்ந்த அணி விளையாட உள்ளது?
அ) மியான்மர்
ஆ) கம்போடியா
இ) செளதிஅரேபியா
ஈ) ஜப்பான்
8) மகளிர் தினத்தை முன்னிட்டு, 10 பெண் பிரபலங்களின் பெயரால், பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இசைப்பாடகி யார்?
அ) நித்யஸ்ரீ மகாதேவன்
ஆ) எம்.எஸ். சுப்புலட்சுமி
இ) சுதா ரகுநாதன்
ஈ) நாகரத்தினம் அம்மாள்
9) சமீபத்தில், எந்த விளையாட்டில் சென்னை அணி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது?
அ) ஐ.பி.எல். கிரிக்கெட்
ஆ) ஐ.எஸ்.எல். கால்பந்து
இ) புரோ கபடி
ஈ) பிபிஎல் (PBL) பேட்மிண்டன்
10) இந்திய இரயில்வேயில் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ள முதல் ஆலை எது?
அ) தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை
ஆ) கழிவுகளை எரிபொருளாக்கும் ஆலை
இ) உருக்கு ஆலை
ஈ) மின்வயர் உற்பத்தி ஆலை
விடைகள்: 1) இ 2)அ 3)அ 4)ஆ 5)ஈ 6) ஈ 7)ஈ 8)ஆ 9)ஆ 10) ஆ

