PUBLISHED ON : மார் 16, 2020

1. கொரோனா பரவி வரும் நிலையில், எதைச் செய்தால், 7 ஆண்டு சிறை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது?
அ) பொய் பீதியைக் கிளப்பினால்
ஆ) கொரோனா அறிகுறியை மறைத்தால்
இ) மாஸ்க், சானிடைசரைப் பதுக்கினால்
ஈ) இவை அனைத்தும்
2. தமிழகத்தில் மின் நுகர்வோர் விரும்பினால், வீட்டுக்கே வந்து மின்கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்குரிய நிபந்தனை என்ன?
அ) கூடுதலாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்
ஆ) கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும்
இ) குறைந்தது 500 யூனிட்டுகள் பயன்படுத்தியிருக்க வேண்டும்
ஈ) அப்படி எதுவுமில்லை
3. எந்தக் கோயிலில், கொரோனா பரிசோதனைக்குப் பிறகே சாமி தரிசனம் செய்வதற்காக உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்?
அ) திருப்பதி ஏழுமலையான்
ஆ) தஞ்சை பெரிய கோயில்
இ) மதுரை மீனாட்சியம்மன் கோயில்
ஈ) மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
4. தமிழக அரசின் உத்தரவுப்படி, அனைத்து விரைவுப் பேருந்துகளிலும் __________ செய்யப்பட்ட பின்னரே, பேருந்து இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது?
அ) பயணிகளுக்கு மாஸ்க் விநியோகம் செய்த பின்னரே
ஆ) பயணிகள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு
இ) பேருந்தை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு
ஈ) இவை அனைத்தும்
5. பொருளாதார மந்த நிலையால், கடந்த பிப்ரவரி மாதம் எதன் விற்பனை 19.08% சரிந்துள்ளது?
அ) பெட்ரோல்
ஆ) மோட்டார் வாகனங்கள்
இ) ஸ்மார்ட்போன்
ஈ) சிமென்ட்
6. பின்வருவனவற்றில் கொரோனா பற்றிய தவறான கருத்து எது?
அ) வெப்பம் மிகுதியாக இருக்குமிடத்தில் கொரோனா வராது
ஆ) அசைவ உணவை உட்கொண்டால் கொரோனா வரும்
இ) நாசியை உப்பு நீரால் கழுவினால் கொரோனா வராது
ஈ) இவை அனைத்தும்
7. எந்த நாட்டில், குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது?
அ) இலங்கை
ஆ) இத்தாலி
இ) ஈரான்
ஈ) சுவிட்சர்லாந்து
8. எந்தச் சமூக வலைத்தளத்தை தவிர்த்தால் உடல்நலனை மேம்படுத்தும் பழக்கவழக்கங்கள் அதிகரிக்கும் என்று ஜெர்மானிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்?
அ) ஃபேஸ்புக்
ஆ) இன்ஸ்டாகிராம்
இ) யூடியூப்
ஈ) டிவிட்டர்
9. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருமண நிகழ்ச்சிகளுக்கு, எந்த மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது?
அ) கேரளம்
ஆ) கர்நாடகம்
இ) ஆந்திரம்
ஈ) மகாராஷ்டிரம்
10. இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் எத்தனை புதிய விமானங்கள் தேவைப்படும் என்று ஏர்பஸ் இந்தியா தெரிவித்துள்ளது?
அ) 200
ஆ) 400
இ) 900
ஈ) 1900
விடைகள்: 1)இ 2)ஆ 3)அ 4)இ 5)ஆ 6)ஈ 7)இ 8)அ 9)ஆ 10)ஈ

