sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கல்வியில் சுதந்திரம் காண்போம்!

/

கல்வியில் சுதந்திரம் காண்போம்!

கல்வியில் சுதந்திரம் காண்போம்!

கல்வியில் சுதந்திரம் காண்போம்!


PUBLISHED ON : செப் 11, 2017

Google News

PUBLISHED ON : செப் 11, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், செயல்வழிக் கற்றல் முறைகளைச் சிறப்பாகச் செய்யவும், கல்லூரிகளில் தன்னாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு தன்னாட்சி வழங்கலாமா? செங்கல்பட்டு, நென்மேலி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம்.

பள்ளிகளில் தன்னாட்சியா? ஒவ்வொரு ஸ்கூலும் ஒவ்வொரு விதமாக கற்றுக்கொடுக்குமே? கல்வியின் தரத்தை உயர்த்துகிறேன், வித்தியாசமாகச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று புதிய உத்திகளை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் புகுத்துமே. போட்டி போட்டுக்கொண்டு, மாணவர்களுக்கு சுமையைத் தான் ஏற்றுவார்கள். தன்னாட்சி முறை பள்ளிகளுக்குத் தேவையே இல்லை.

வி.தீபா, 10ம் வகுப்பு

பள்ளிகளில், தன்னாட்சி முறை வந்தால், பல நல்ல மாற்றங்கள் வரும். பழைய பாடங்களையே வைத்துக்கொண்டு மாரடிக்க வேண்டாம். சமீபத்திய முன்னேற்றங்களைப் பாடத்திட்டத்தில் கொண்டுவர முடியும். அதேபோல், வித்தியாசமான முறையில் சொல்லித் தரலாம். பரீட்சைகள் கூட ரொம்ப சுமையில்லாமல், மாணவர்களுடைய படிப்படியான வளர்ச்சியைப் புரிந்துகொண்டு வைக்கப்படலாம். தன்னாட்சின்னா சுதந்திரம். பள்ளிகளுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.

பு.ரக் ஷணா, 9ம் வகுப்பு

தன்னாட்சியில் ஒரு பெரிய செளகரியம் இருக்கு. சிலபஸை முடிக்கணும்னு அவசரப்பட வேண்டாம். எதைச் சொல்லிக் கொடுத்தாலும் அதை முழுசா சொல்லித்தரலாம். நிதானமா புரியறா மாதிரி சொல்லித் தரலாம். சந்தேகங்கள் இருந்தால், அதை இன்னும் நேரம் எடுத்து தெளிவாக்கிக்கொள்ளலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் இன்னும் கொஞ்சம் அன்னியோன்யமாக பழக முடியும்.

நா.கோகுலேஸ்வரன், 10ம் வகுப்பு

தன்னாட்சி இருந்தா, ஏராளமான புதுவிஷயங்களைச் செய்யலாம். வழக்கமான படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காம, டிராமா போடறது, பாட்டு சொல்லிக் கொடுக்கறது, வேற மொழி சொல்லிக் கொடுக்கறதுன்னு நிறைய செய்யலாம். மாணவர்களோட பல்வேறு திறமைகளை ஊக்கப்படுத்தறா மாதிரி, அவங்களுக்கு தமிழ் மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம் வெச்சு, அந்தந்தத் துறையில ஆர்வமுடைய மாணவர்களை ஈடுபடுத்தலாம்.

அ.கோ.தனுஷா, 10ம் வகுப்பு

தன்னாட்சியில ஆசிரியர்கள் தான் முக்கியத்துவம் பெறுவாங்க. இன்னிக்கு பல ஸ்கூல்ல, அவங்க மேலே இருக்கற மேனேஜ்மென்ட் அல்லது பிரின்சிபல் சொல்றதை அப்படியே செய்யறாங்க. ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கெடைக்கறது இல்ல. ஆனால், தன்னாட்சின்னு வந்தா, மாணவர்களோட வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்க வேண்டியது ஆசிரியர்கள். அவங்களோட திறமை, அவங்களோட ஈடுபாடு, அவங்க கத்துக்கொடுக்கும் முறை முக்கியத்துவம் பெறும். ஆக, ஆசிரியர்கள் தங்களோட சுதந்திரத்தைப் பெறுவதற்குத் தன்னாட்சி வேண்டும். மேலும் தலைநிமிர்ந்து ஒரு 'குரு'ங்கற கெத்தோடு அவங்க வளைய வருவாங்க.

இ.ரா.ஸ்ரீதேவி, 12ம் வகுப்பு

தன்னாட்சியோட சிறப்பே ஏற்றத்தாழ்வுகளைக் களையறதுதான். ஒரு மாணவர் ஸ்லோ லேனராக இருக்கலாம். வகுப்பறையில அவரால மத்தவங்களோட போட்டி போட்டு புரிஞ்சுக்க முடியாது. அவரை கைதூக்கிவிடறதுக்கான முயற்சியை தன்னாட்சி பள்ளிகள்ல செய்ய முடியும். இன்னொரு முக்கிய விஷயம், மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 போகும்போது, எந்த குரூப் எடுக்கறதுன்னு தெரியாம திண்டாடுவாங்க. அவங்களுக்கு எந்தத் துறையில ஆர்வம் இருக்கு, திறமை இருக்குன்னு கண்டுபிடிக்க முடியாம போறதனாலேயே, இந்தப் பிரச்னை இருக்கு. தன்னாட்சி பள்ளிகளில், சின்ன வயதிலேருந்தே மாணவர்களை முறையா புரிஞ்சுக்கிட்டு, கணிச்சு, அவங்களுக்கு தோதான மேற்படிப்புக்கு ஏத்தமாதிரி, எந்த குரூப் எடுக்கலாம்னு கண்டுபிடிச்சு வழிகாட்ட முடியும். தன்னாட்சின்னா, இன்னும் நெகிழ்ச்சி, இன்னும் சுதந்திரம், இன்னும் கொஞ்சம் பொறுப்பு எல்லாம் சேர்ந்து இருக்கும். பள்ளி நடத்தறவங்களுக்கும் நல்லது, மாணவர்களுக்கும் நல்லது.

ரா.ராகுல், 10ம் வகுப்பு






      Dinamalar
      Follow us