தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எழுதிப் பழகுவோம்!

எழுதிப் பழகுவோம்!

எழுதிப் பழகுவோம்!


PUBLISHED ON : செப் 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எழுதிப் பார்ப்பது கற்றலில் முக்கியமான ஒன்று. படித்தவற்றை நன்கு நினைவில் வைத்துக்கொள்ள, அது உதவுகிறது. தெளிவாகவும் விரைவாகவும் எழுதுவதற்கான பயிற்சி, படித்ததை எழுதிப் பார்ப்பதுதான். வீட்டுப் பாடம் என்றாலே பலருக்கும் கசக்கிறது. ஆனால், வீட்டுப்பாடம் தருவதை ஆசிரியர்கள் விரும்புவதைப்போலவே, பெற்றோர்களும் விரும்புகிறார்கள். வீட்டுப்பாடத்தின் முக்கியத்துவம் என்ன? என்ற தலைப்பில் திருவள்ளூர், பெரிய குப்பம், ஜேக்கப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளைக் காண்போம்.

ஹ.பாவனா, 8ஆம் வகுப்பு

வீட்டுப் பாடம் பண்றதால கையெழுத்து நல்லா வரும். அதுதான் எனக்கு முக்கியமாத் தெரியுது. ஸ்கூல்ல எதையாவது எழுதச் சொன்னா, அதுல மட்டும் கவனம் இருக்கும். வீட்ல எழுதும்போது, நிறைய விஷயங்கள் கவனத்தைச் சிதறடிக்கின்றன. அதனால, எழுத கூடுதலா நேரம் தேவைப்படுது.

ஜே.ரெபேக்கா ஜேக்கப், 7ஆம் வகுப்பு

வீட்டுப்பாடம், சில நேரங்களில் பிடிக்கும்; சில நேரங்களில் பிடிக்காது. பொதுவான விஷயங்களை எழுதிட்டு வரச்சொன்னா பிடிக்கும். புத்தகத்துல இருக்கறதையே திரும்பத் திரும்ப எழுதச் சொன்னா பிடிக்கறதில்ல. மாணவர்களோட செயல்திறனை மேம்படுத்தற விதத்துல வீட்டுப்பாடம் கொடுத்தா நல்லாயிருக்கும்.

சீ.மீனாட்சி, 9ஆம் வகுப்பு

கணக்குப் பாடத்துக்கு, வீட்டுப்பாடம் ரொம்ப பயனுள்ளதா இருக்கு. மத்த பாடங்களைவிட, கணக்குல நிறைய வீட்டுப்பாடம் கொடுக்கலாம். நல்லா பயிற்சி செய்ய முடியும். அசைன்மென்ட் மாதிரி கொடுக்கற வீட்டுப்பாடங்கள், ரொம்பப் பிடிக்கும்.

யோ.தமிழரசன், 10ஆம் வகுப்பு

தினமும் ஏழு மணி நேரம் பள்ளிக்கூடத்துல படிச்சுட்டுத்தான் வரோம். வீட்டுக்கு வந்தும் படிக்கவே நேரம் சரியா இருக்கு. அதனால, வீட்டுப்பாடம் செய்ய கஷ்டமா இருக்கு. பத்தாவதுக்கெல்லாம் தேவையில்லைன்னு நினைக்கறேன்.

சே.அருண்குமார், 10ஆம் வகுப்பு

மனப்பாடம் பண்றதைவிட, எழுதிப் பார்க்கறப்ப நல்லா மனசுல பதியுது. சிலரால மூணு மணி நேரத் தேர்வை, அந்த நேரத்திற்குள்ள எழுத முடியாம போயிடும். குறிப்பிட்ட நேரத்துல நம்மால எழுத முடியுதாங்கிறதுக்கான பயிற்சியாத்தான் வீட்டுப் பாடம் இருக்கு.

பூ.ஜெய்கணேஷ், 9ஆம் வகுப்பு

வீட்டுப்பாடத்தை சரியா முடிக்கணும்னா, வகுப்புல பாடத்தை ஒழுங்கா கவனிச்சாதான் முடியும். நாம படிச்சதுல என்ன நினைவு வெச்சிருக்கோம்னு தெரிஞ்சுக்கறதான வழிமுறைதான் அது. நேரமில்லைன்னு சொல்லக்கூடாது. தினமும் வீட்டுப்பாடம் செய்யறதால, நமக்கு எழுத்துப் பயிற்சி கிடைக்கும்.

நா.ஷேவாக், 9ஆம் வகுப்பு

பள்ளியில படிச்சதை, நினைவுபடுத்திப் பார்க்க, வீட்டுப்பாடம் உதவுது. குறிப்பா, கணக்குப் பாடத்துக்கு, வீட்டுப்பாடம்தான் சிறந்த பயிற்சி. தினமும் அரை மணி நேரமாவது, வீட்டுப்பாடம் செய்யறது நல்லது. செய்யாதவங்களுக்கு கடுமையா தண்டனையெல்லாம் கொடுக்கக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us