sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியை கேளுங்க!

/

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : பிப் 24, 2020

Google News

PUBLISHED ON : பிப் 24, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

1. ட்ரோனில் தயாரிக்கப்பட்ட லாஞ்ச்பேடை (Launchpad) பயன்படுத்தி ராக்கெட் அனுப்பலாமே! இதன்மூலம் விண்கலத்தை அதிக உயரத்திற்குக் கொண்டு சென்று செலுத்த முடியும் அல்லவா?

அடோனிஸ், 12ஆம் வகுப்பு, கெஸ்விக் பப்ளிக் பள்ளி, மதுரை.


ட்ரோன், ஆற்றல் திறன் கொண்டது அல்ல. அதனை உயரத்தில் எடுத்து செல்லவும், ராக்கெட்டை ஏந்திச் செல்லும் அளவுக்கு அதற்கு ஆற்றல் தரவேண்டும். பூமியிலிருந்து விண்ணுக்கு ராக்கெட் அனுப்ப ஈர்ப்புவிசை, காற்றின் உராய்வு விசை ஆகிய இரண்டு விசைகளின் தடைகளைக் களைய வேண்டும். உராய்வு விசையைக் குறைக்கும்படி, ராக்கெட் வடிவமைப்பு இருக்கும். ஈர்ப்பு விசையிலிருந்து விடுபடவே ராக்கெட் இயக்கப்படுகிறது. ஒரு பொருளின் எடை தான், அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு விசையின் அளவு. எடை கூடினால் ஈர்ப்பு விசையின் வலு கூடும். எனவே தான், பெரிய ராக்கெட் அனுப்ப மேலும் கூடுதல் விகிதத்தில் ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே ட்ரோனில் தயாரிக்கப்பட்ட லாஞ்ச்பேடைப் பயன்படுத்தினால் அதனை உயரே கொண்டு செல்ல மிகக் கூடுதல் ஆற்றல் தேவைப்படும்.

2. உப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா? உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்?

எஸ்.கிஷோர் கண்ணன், 8ஆம் வகுப்பு, வேலம்மாள் போதி வளாகம், மதுரை.


எரிபொருளைக் கொண்டுதான் எந்த இயந்திரமும் இயங்க முடியும். நீர் என்பது H2O. இதில் உள்ள ஹைட்ரஜனைப் பிரித்துவிட்டால், அதனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் கடல் நீரை வைத்து எப்படி ஹைட்ரஜனைத் தயாரிக்கலாம் என்றே ஆராய்ச்சி செய்கிறார்கள். ஜான் கன்சியுஸ் (John Kanzius) என்ற ஆராய்ச்சியாளர், கேன்சர் கட்டியின் உள்ளே புகுத்தப்பட்ட உலோகத் துகளை ரேடியோ அலைகள் மூலம் வெப்பமடையச் செய்தார். இதன்மூலம், கேன்சர் செல்களை அழிக்க முயன்றார்.

தற்செயலாக அவர் பயன்படுத்திய 13.56 மெகா ெஹர்ட்ஸ் (MHz) ரேடியோ அலை, அருகில் வைக்கப்பட்டிருந்த உப்பு நீரில் தீப்பொறியை ஏற்படுத்தியது. ரேடியோ அலைகளைச் செலுத்தி உப்பு நீரை எரிக்க முடியும் என அவர் கண்டார். ஆனால், ரேடியோ கதிர்கள் தயாரிக்கச் செலவு அதிகம். எனவே அந்த முறை சாத்தியம் இல்லை.

3. ஒவ்வொரு நாட்டுக்கும் நிலப்பரப்பு எல்லை இருப்பதுபோல், விண்வெளி மற்றும் கடல் பரப்பை உலக நாடுகள் எவ்வாறு அங்கீகரிக்கின்றன?

வி.சந்தானகோபாலன், மதுரை.


சர்வதேச கடல் சட்டத்தின்படி, கடற்கரையில் இருந்து 22.2 கி.மீ. வரை உள்ள கடல் அந்த நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு (territorial waters). அதற்குட்பட்ட கடல் மற்றும் வான் பகுதி எல்லாம் அந்த நாட்டின் எல்லை எனக் கருதுகின்றனர்.

இது தவிர கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்கும் பொருட்டு கடல் எல்லையில் இருந்து அடுத்த 22.2 கி.மீ. வரை உள்ள கடல் பகுதி அண்மை கடற்பரப்பு (contiguous zone) எனப்படுகிறது. அதிகபட்சமாக 200 கடல் மைல் தூரம் வரை பரவியுள்ள கடல் பகுதி ஒரு நாட்டின் பொருளாதாரத் தனியுரிமை பகுதி (Exclusive Economic Zone - EEZ) எனப்படுகிறது. இங்கே கடலின் அடியில் உள்ள வளங்களை எடுக்க அந்த நாட்டுக்கே உரிமை என்றாலும், மற்ற நாடுகளின் கப்பல்கள் செல்லத் தடை ஏதுமில்லை.

வானத்தில் எவ்வளவு உயரம் வரை ஒரு நாட்டின் ஆகாயப் பரப்பு என்பதை எந்தச் சர்வதேச சட்டமும் வரையறை செய்யவில்லை. ஏவுகணைகள் வெறும் 25 கி.மீ. உயரம் தான் செல்ல முடியும். போர் விமானங்கள் அதிகபட்சமாக 30 கி.மீ. உயரம் வரை செல்ல முடியும். எனவே, ஒரு நாட்டின் நிலம் மற்றும் கடற்பரப்பின் மீது 30 கி.மீ. உயரம் வரை அந்த நாட்டின் ஆகாயப் பரப்பு என கருதப்படுகிறது.

4. ஒளி உட்பட எதுவும் வெளியேற முடியாத அளவு ஈர்ப்பு சக்தியைக் கருந்துளைகள் கொண்டுள்ளன. அவ்வாறு இருக்க, இரு கருந்துளைகள் சந்தித்தால் என்ன ஆகும்?

அப்துல்லாஹ் அசரப்அலி, 5ஆம் வகுப்பு, ஸ்ரீ வாணி வித்யாலயா பள்ளி, திண்டுக்கல்.


விண்வெளியில் இரண்டு பொருட்கள் மோதிக் கொண்டால் மூன்று விதமான விளைவுகள் ஏற்படலாம்.

1. ஒன்றுடன் ஒன்று பிணையலாம் 2. மோதித் தெறிக்கலாம் 3. ஒன்றன் மீது ஒன்று சறுக்கி விலகலாம்

சிறு கோள்கள் மோதிப் பிணைந்து உருவானதுதான் பூமி. அதேபோல பூமியின் மீது ஒரு பெரும் வான் பொருள் மோதி, வானில் தெறித்த பொருள்கள் திரண்டு, நிலா உருவானது எனவும் கூறுகிறார்கள். இரண்டு கருந்துளைகள் சந்தித்தால், அவற்றின் ஈர்ப்பு சக்தி காரணமாக இரண்டும் ஒன்றில் ஒன்று பிணைந்து புதிய கருந்துளை உருவாகும்.






      Dinamalar
      Follow us