PUBLISHED ON : பிப் 12, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவைச் சேர்ந்த 'ஜெர்பெர்' எனும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம், தனது இலச்சினையில் (லோகோவில்) இடம்பெறும் குழந்தையைத் தேர்ந்தெடுக்க ஒரு புகைப்படப் போட்டியை நடத்தியது. ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த லூகாஸ் வாரன் என்ற ஒரு வயதுக் குழந்தை இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. லூகாஸ், மரபணு குறைபாட்டால் ஏற்படும் டவுன் சிண்ட்ரோம் எனும் வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தை. இனி ஜெர்பெர் நிறுவனத்தின் லோகோவில் லூகாசின் முகம் இடம்பெறும். இந்திய மதிப்பில் சுமார் 32 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வாரன் குடும்பத்தினருக்குக் கிடைக்கும். வளர்ச்சிக் குறைபாடுள்ள ஒரு குழந்தைக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம், சமூகத்தின் பார்வை மாறிவருவதைக் காட்டுகிறது.