PUBLISHED ON : ஜூலை 03, 2017

கடந்த 40 ஆண்டுகளில், 88 சிறப்புக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துள்ளனர் ஒரு தம்பதி. மருத்துவரான மைக்கேலும் அவரது மனைவியும் செவிலியுமான கேம்லியும் (Camille Geraldi) தான் அந்த அதிசயத் தம்பதி.
மியாமியிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் வேலை செய்த கேம்லியும், மைக்கேலும் இனி பிழைக்க மாட்டார்கள் என்று கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினர். மைக்கேல், கேம்லியின் அன்பினாலும், அரவணைப்பாலும் இக்குழந்தைகளில் பெரும்பாலானோர் உயிர்பிழைத்து விட்டனர். டவுன் சிண்ட்ரோம், செரிபரல் பால்ஸி போன்ற பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட குழந்தைகள், கேம்லியின் அரவணைப்பில் வளர்கின்றனர். சில சிறப்புக் குழந்தைகளை பெற்றோரே கேம்லி தம்பதியிடம் விட்டுவிடுவதும் உண்டு. 2015ல் மைக்கேல் புற்றுநோயால் மரணமடைந்தார். ஆனாலும், தளராத மனதோடு கேம்லி, தனது தொண்டுகளைத் தொடர்ந்து வருகிறார். 'Possible Dream Foundation' அமைப்பின் மூலம், சிறப்புக் குழந்தைகளைப் பராமரிப்பது, அவர்களின் கல்வி போன்றவற்றிற்கு வழிகாட்டுதல்களை வழங்கி வரும் கேம்லி, ஒரு சாதனைப் பெண்மணி.
