sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மொழிகளுக்கான வரைபடம்

/

மொழிகளுக்கான வரைபடம்

மொழிகளுக்கான வரைபடம்

மொழிகளுக்கான வரைபடம்


PUBLISHED ON : ஆக 14, 2017

Google News

PUBLISHED ON : ஆக 14, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யுனெஸ்கோ நிறுவனம், குறிப்பிட்ட கால இடைவெளியில், மொழிகளுக்கான உலக வரைபடம் (Atlas) தயாரித்து வெளியிடுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மொழி வரைபடத்தில், பயன்பாட்டின் அடிப்படையில், மொழிகள் 6 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

vulnerable - பாதிக்கப்படும் நிலையில் இருப்பவை. அம்மொழி பேசும் மக்களில், பெரும்பாலான குழந்தைகளால் பேசப்படும் மொழி. அதேசமயம் குறுகிய பரப்புக்குள் மட்டுமே அக்குழந்தைகளால் பயன்படுத்தப்படும் மொழி. (உதாரணம்: வீடு போன்ற இடங்களில் மட்டும் பேசப்படுவது).

Definitely endangered - நிச்சயமாக பாதிக்கப்படும் நிலையில் உள்ள மொழி. வீட்டில் தாய்மொழியாக இருந்தும், குழந்தைகளால் கற்றுக் கொள்ளப்படாத, பேசப்படாத மொழி.

severely endangered - மிக மோசமாக அழியும் நிலையில் உள்ள மொழி (Severely endangered): தாத்தா, பாட்டி போன்ற மூத்த தலைமுறையினரால் பேசப்படும் மொழி. பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், தங்களுக்குள்ளோ, தங்கள் குழந்தைகளிடமோ அம்மொழியில் பேசுவதில்லை.

critically endangered - மிகத் தீவிரமாக அழியும் நிலையில் உள்ள மொழி. தாத்தா, பாட்டி போன்ற மூத்த தலைமுறையினரே, ஓரளவு மட்டுமே அந்த மொழியை அறிந்திருப்பது.

Extinct - அழிந்துவிட்ட மொழி. அம்மொழியைப் பேசுபவர்களே இல்லாத நிலை.

Safe endangered - அனைத்து தலைமுறையாலும் பேசப்படும் மொழி; தலைமுறைகளுக்கு இடையில் அம்மொழியில் தடையற்ற பகிர்வு. இவ்வகைக்குள் வரும் மொழிகள், 'மொழி உலக வரைபட'த்தில் குறிப்பிடப்படவில்லை.

இந்த வரைபடத்தைக் காண http://www.unesco.org/languages-atlas/index.php என்ற இணைய சுட்டியை சொடுக்கவும்.






      Dinamalar
      Follow us