உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 20, 2016

அ நிறம் | அளவு
'இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் உள்ள 'பஹலோடி' என்னும் நகரில் அதிகபட்ச வெப்ப நிலையாக 51 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகி இருக்கும் மிக அதிகபட்ச வெப்பநிலை இதுதான். இதற்கு முந்தைய அதிகபட்ச வெப்ப நிலை 1956ல் பதிவாகிய 50.6 செல்சியஸ் ஆகும். இந்தியாவில் பருவமழையை எதிர்நோக்கும் வாரங்களில் நல்ல சூரிய வெளிச்சமும், வெப்பம் அதிகரிக்கும் நிலை இருப்பதும் இயல்பு. ஆனால் உயிருக்கு ஆபத்தான அளவில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டுவது வழக்கத்துக்கு மாறானது' என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
