PUBLISHED ON : பிப் 26, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் உள்ள 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தத்தெடுக்க உள்ளது. அப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கணினித் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திறனாய்வு, நிரல் எழுதுதல், கணினி விளையாட்டுகளை உருவாக்குதல், செயலிகளை உருவாக்குதல், ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன செயற்பாடுகளில் பயிற்சி அளிக்க அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ''இந்தியாவின் கல்வி அமைப்பை 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான வகையில் மேம்படுத்தும் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தமிழக அரசுடன் இணைந்து இப்பாதையில் பயணிப்போம்'' என்று, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் மனீஷ் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.