PUBLISHED ON : மார் 10, 2025

1. எண்ட் பின் (End pin) என்றால் என்ன?
சிம்பொனி ஆர்கஸ்டிராவில் பயன்படும் மர இசைக்கருவிகளைத் தாங்கிப் பிடிக்கும் உலோகப் பகுதிக்குப் பெயர் எண்ட் பின்.
2. அதன் நீளம் எவ்வளவு?
கனமான உலோகம் அல்லது கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட எண்ட் பின், மூன்று முதல் ஐந்து அடி நீளம் வரை இருக்கும்.
3. இது சறுக்காமல் இருக்கப் பயன்படுவது எது?
வட்டவடிவ கிரிப் டிஸ்க்குகள் அல்லது நாற்காலியின் காலில் இருந்து எண்ட் பின் முனைவரை நீளும் கனமான துணியாலான பெல்டுகள் பயன்படுகின்றன.
4. எண்ட் பின் இணைக்கப்பட்ட இசைக்கருவிகள் சில...
செலோ, டபுள் பாஸ், பாஸ் கிளாரினட், கான்ட்ரா பசூன்ஸ்.
5. ஒரு செலோ கலைஞர் இதை எவ்வாறு பயன்படுத்துவார்?
தனது உடல் அமைப்பு, உயரத்துக்கேற்ப எண்ட் பின் உயரத்தை ஏற்றி இறக்கிக் கொள்வார். கச்சேரி முடிந்ததும் எண்ட் பின் முனையை விரல்களால் பற்றி, அதனை முழுவதுமாக செலோவின் பரந்த வெற்றிடம் கொண்ட உடலினுள் அழுத்தி நுழைத்து, எண்ட் பின் உடன் இணைக்கப்பட்டுள்ள உலோகக் கிளாம்ப்பைத் திருகி பூட்டிக் கொள்வார்.