தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நவீன தகவல் களஞ்சியங்கள்

நவீன தகவல் களஞ்சியங்கள்

நவீன தகவல் களஞ்சியங்கள்


PUBLISHED ON : ஜன 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

புத்தக வாசிப்பாளர்கள் தங்கள் வீடுகளில் வாசித்த புத்தகங்களைக் கொண்டு சிறு நூலகத்தை அமைப்பதுண்டு. அவரவர் வசதியைப்பொறுத்து, இந்த நூலகங்களிலுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை கூடும்,குறையும். அரசு நடத்தும் நூலகங்களில் ஆயிரம் முதல் லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகங்களும் உண்டு.

இருநூறு நூல்களைக் கொண்டதும், ஐந்து லட்சம் நூல்களைக் கொண்டதும் நூலகம்தானா? அதற்கு வேறு பெயர் கிடையாதா? இருக்கிறது, நூற்களஞ்சியம்!

'களஞ்சியம்' என்பது ஒன்றை மிகுதியாகத் திரட்டிச் சேமிக்கும் இடத்தைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, 'நெற்களஞ்சியம்' என்பது, நெல்லைச் சேமித்து வைக்கும் இடமாகும். நெல்வளம் மிகுந்த தஞ்சைக்கு 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்று பெயர்.

ஒரு மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் அவற்றின் பொருளோடு தொகுத்து வழங்கும் நூல்களை சொற்களஞ்சியம் என்று குறிப்பிடுகின்றனர். 'தகவற்களஞ்சியம்' என்ற சொல், ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய ஏராளமான தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் நூல்களைக் குறிப்பிடுகிறது.

'கலைக்களஞ்சியம்' (Encyclopedia) என்பது, பல தகவல் களஞ்சியங்களின் தொகுப்பு. பலவிதத் தலைப்புகளில் எண்ணற்ற தகவல்களைத் தொகுத்துத் தரும் நூல்களாக இவை இருக்கும். அச்சு நூல்கள், மின்னூல்கள், இணையதளங்கள் என, கலைக்களஞ்சியங்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன.

களஞ்சியங்கள், நிறைய தகவல்களைக் கொண்டதாக இருப்பதோடு, எளிதில் அணுகும்படியாகவும் இருக்கவேண்டும்.

களஞ்சிய நூல்களில் Index எனப்படும் குறியீட்டுமுறை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், தகவல் களஞ்சியத்தில் நமக்குத் தேவையான பகுதியை நொடியில் அணுகிப் படிக்கலாம். இணையம் சார்ந்த களஞ்சியங்களில் ஒரு சிறு சொல்லைக்கூட உள்ளிட்டுத் தேடி வாசிக்கலாம்.

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us