உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 01, 2019

அ நிறம் | அளவு
வங்காரி மாத்தாய்
1.4.1940 -- 25.9.2011
நைரோபி, கென்யா
சுற்றுச்சூழலைக் காக்கவும், தமது சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காகவும் போராடியவர், வங்காரி மாத்தாய். தனது 'பசுமைப் பாதை இயக்கம்' (Green belt movement) மூலம், கென்யாவில் மட்டும் 5.1 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளார். கிராமப்புறப் பெண்களை மரங்கள் வளர்க்க ஊக்கப்படுத்தி, பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் வழங்கினார்.
அமெரிக்காவில் இருந்தபோது, மாட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தன் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாடு திரும்பினார். சமூகப் போராட்டங்களுக்காகப் பல முறை சிறை சென்றதுடன், பல பரிசுகளையும் பெற்றார். 2003ஆம் ஆண்டு தேர்தலில் வென்று, வனத்துறை இணை அமைச்சர் ஆனார். 2004ஆம் ஆண்டு நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.
