உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 01, 2018
அ நிறம் | அளவு
ஏன் குற்றியலுகரம், முற்றியலுகரம் எனச் சொல்கிறோம்?
குறில் எழுத்துகளை, 'அ'கரம் 'இ'கரம் என கரம் சேர்த்துச் சொல்வது தமிழில் வழக்கம். ஆகவே, உ என்ற எழுத்தை உகரம் என்கிறோம். கு(க்+உ), சு (ச்+உ), டு, து, பு, று என்பவை உயிர்மெய் உகரங்கள்தானே. உ என்ற குறில் எழுத்துக்கு ஒரு மாத்திரை. ஆனால், சொல்லின் கடைசி எழுத்தாக இந்த வல்லின உகரங்கள் வந்தால், பெரும்பாலான இடங்களில் அந்த எழுத்துகள் ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், அதை விடக் குறுகி ஒலிக்கும். எனவேதான் அவை குற்றியலுகரம் (குன்றிய உகரம்) என அழைக்கப்படுகின்றன.
அப்படியானால், முற்றியலுகரம் என்பது? சொல்லின் கடைசியில் வல்லின உயிர்மெய் உகரங்கள் வந்தும், குறுகி ஒலிக்காமல் முழுதாக ஒலித்தால் அவை முற்றியலுகரம். எடுத்துக்காட்டுகளைத்தான் மேலே பார்த்தோமே!.
