தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'நெல்'தாசன்

'நெல்'தாசன்

'நெல்'தாசன்


PUBLISHED ON : டிச 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டு யானம், பூங்கார், கருங்குறுவை, குள்ளக்கார், மட்டைக்கார், குழிவெடிச்சான், சேலம் சன்னா, தூயமல்லி, சிவப்புக் கவுணி, கருப்புக் கவுணி, மைசூர் மல்லி, கருடன் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, ஒட்டடையான், இலுப்பைப்பூச் சம்பா, பால் குடவாலை, வாடன் சம்பா, கொட்டாரச் சம்பா, கார் நெல்லு...

இவையெல்லாம் என்ன?

தமிழகத்தில் அந்தக் காலத்தில் பயிர்செய்யப்பட்ட பல்வேறு நெல் ரகங்களில் ஒருசில. இவற்றையும் சேர்த்து, சுமார் 174 பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரித்து, காப்பாற்றியவர் 'நெல்' ஜெயராமன். இவற்றைக் கண்டுபிடிக்க இவர் மேற்கொண்ட பயணம் மிகவும் சிரமமானது. பல்லாண்டுகள் நீண்டது.

மேலும், இவற்றைப் பயிர்செய்து பார்த்து, சோதித்து, அதன் தன்மைகளை உறுதிப்படுத்தினார் ஜெயராமன். அதன் பின்னரே, இவற்றை விவசாயிகளிடம் கொடுத்து, பயிரிடச் செய்து, நல்ல மகசூல் கிடைக்க முயற்சி எடுத்தார். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் உண்டு. அந்தக் குணங்களையும் அதனால் ஏற்படும் நற்பலன்களையும் தெரிந்துகொண்டு, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்தவர் ஜெயராமன். நெல்லைப் பாதுகாப்பதில் ஈடுபட்ட இவரை 'நெல்'தாசன் என்றே அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us