தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செய்தி அறிவோம்: டைனோசர் கால விசித்திர குளவி!

செய்தி அறிவோம்: டைனோசர் கால விசித்திர குளவி!

செய்தி அறிவோம்: டைனோசர் கால விசித்திர குளவி!


PUBLISHED ON : அக் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த விசித்திர குளவியை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மியான்மரில் உள்ள வனவிலங்கு சரணாலயமான ஹுக்காவுங் பள்ளத்தாக்கில், விஞ்ஞானிகள், அழிந்துபோன உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குளவியினத்தை சேர்ந்த பூச்சியை, அவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். மரப்பிசினில் இயற்கையாக பாதுகாக்கப்பட்டு இருந்த குளவியை ஆய்வு செய்தனர். அதற்கு இறக்கைகள் இல்லாமல் இருந்ததோடு, வெட்டுக்கிளிகளின் கால்கள், கரப்பான் பூச்சிகளின் வயிறு, எறும்புகளின் உணர்கொம்பு என்று கலவையான தோற்றத்தை கொண்டிருந்தது. இதனால், அது எந்த பூச்சியினத்தை சேர்ந்தது என்று, விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் குழப்பமடைந்தனர். பின்னர், அது குளவி வகைப் பூச்சி என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு தற்போது, அப்டெனொபெரிசஸ் பர்மேனிகஸ் (Aptenoperissus burmanicus) என்ற அறிவியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

mnn.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us