தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நோபல் நாயகி மலாலா!

நோபல் நாயகி மலாலா!

நோபல் நாயகி மலாலா!


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையோரத்தில் ஒரு சிற்றூர் மிங்கோரா. அங்கே 1997ல் பிறந்தவர் மலாலா. அந்தப் பகுதியில் தாலிபான் (Taliban) அமைப்புகளின் ஆதிக்கம் இருந்தது. பெண்கள் கல்வி கற்பதை, தாலிபான்கள் விரும்பவில்லை. வீட்டுக்கு வெளியே பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதுகூட தாலிபான்களுக்குப் பிடிக்காது.

அவர்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளிக்கு செல்வதில் மலாலா ஆர்வம் காட்டினார். எதிர்ப்புக்களுக்கு இடையேயும் மகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதில் மலாலாவின் அப்பா ஜியாவுத்தீன் உறுதியாக இருந்தார். மலாலாவுக்கு துணையாக, அவரது தந்தையின் போர்க்குணமும் கல்வி ஆர்வமும் இருக்கிறது!

பள்ளி நாட்களிலேயே மலாலா சமூக வலைதளத்தில், ஒரு 'வலைப்பூ' (blogspot) தொடங்கினார். புனைப்பெயரில் தன் கருத்துகளைப் பகிர்ந்துவந்தார். பெண் கல்வி முக்கியமானது என்பதை வலியுறுத்தினார். தற்போது படிக்கக் கிடைக்கும் அவரது நூலான 'I am malala'வில் அவரது கல்வி ஆர்வம் தெளிவாகத் தெரியும். பல்வேறு மொழிகளிலும் அந்த நூல் இப்போது கிடைக்கிறது.

மலாலாவின் வலைதளப் பதிவுகள் பலரையும் கவர்ந்தன. புனைபெயரிலேயே எழுதி வந்த மலாலா, ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார். மிங்கோரா பகுதி தலிபான்கள், மலாலாவை அடையாளம் கண்டுகொண்டனர். 2012 அக்டோபர் 9ல் அவரை கொல்ல முயற்சித்தார்கள். துப்பாக்கி குண்டு பாய்ந்தும், மலாலா பிழைத்துக்கொண்டார். மனம் தளராமல், கல்வி பற்றிய பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

இந்த வீரபெண்ணின் செயல்களுக்கு, இரண்டு பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று, 'அமைதிக்கான நோபல் பரிசு.' இன்னொன்று, ஒவ்வொரு சிறுமியின் மனதிலும், 'தான் மலாலாவைப் போல ஆகவேண்டும்' என்கிற எண்ணம் ஏற்பட்டிருப்பது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us