PUBLISHED ON : மே 19, 2025

இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் பயன்படுத்தினால், கடைசியில் ஒரு மர்ம எண் கிடைக்கும். அது என்ன என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!
மர்ம எண் மூன்று இலக்க எண்ணாகும்.
ஒற்றைப்படை எண்
5ஆல் வகுபடும்
ஒவ்வோர் இலக்கமும் வித்தியாசமானது.
மொத்த இலக்கங்களைக் கூட்டினால் 8 வரும்.
நூற்றின் இட மதிப்பை விட, பத்தின் இட மதிப்பில் வரும் இலக்கம் சிறியது.
300ஐ விடக் குறைவு.
விடைகள்: 215
* மர்ம எண் மூன்று இலக்க எண் என்பதால், அது 100 முதல் 999 வரைக்குள் ஏதேனும் ஓர் எண்ணாக இருக்கும்.
* ஒற்றைப்படை என்பதால், கடைசி இலக்கம் 1, 3, 5, 7 அல்லது 9இல் முடிவடையும்.
* ஐந்தால் வகுபடும் எண் என்று சொல்லியிருப்பதால், கடைசி இலக்கம் 5 என்று தெரிந்துகொள்ளலாம்.
* மொத்த இலக்கங்களைக் கூட்டினால் 8 வரும். நமக்கு ஏற்கெனவே கடைசி இலக்கம் 5 என்று தெரியும். ஆக, நூறின் இட மதிப்பு + பத்தின் இட மதிப்பு = 3 வர வேண்டும்; இதன்மூலம் கிடைக்கும் வாய்ப்புகள்: 3+0, 2+1, 1+2. ஆக, மர்ம எண் 305, 215, 125 ஆகிய ஏதேனும் ஓர் எண்ணாக இருக்கக் கூடும்.
* நூறின் இட மதிப்பை விட, பத்தின் இட மதிப்பில் வரும் இலக்கம் சிறியது என்பதால், 305 அல்லது 215 இருக்கலாம்.
* 300ஐ விடக் குறைவு என்று குறிப்பு இருப்பதால், மர்ம எண் '215' என்று அறியலாம்.