PUBLISHED ON : மார் 13, 2017
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த ஜனவரி 28ல், சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே, இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில், 3.7 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் கொட்டி, கடல் மாசடைந்தது. இந்நிலையில், கப்பல் விபத்து சுற்றுச்சூழலுக்கு எதிரான பேரிடர் என, சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை பொறியியல் துறைப் பேராசிரியர் எஸ்.மோகன் அளித்துள்ள அறிக்கையில், 'கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு, சுற்றுச்சூழலுக்கு எதிரான பேரிடர். கடலின் சுற்றுச்சூழலையே சீரழித்து விடும் அளவுக்கு மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும். கச்சா எண்ணெயில் காணப்படும் பாலி அரோமாடிக் ஹைட்ரோகார்பன் (Poly aromatic hydrocarbons) என்ற விஷத்தன்மை கடலிலும், மீன்களிலும் கலந்துள்ளது. இது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

