sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : பிப் 03, 2025

Google News

PUBLISHED ON : பிப் 03, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

01. இந்தியாவில், தேசியப் பெண் குழந்தைகள் தினம், ஆண்டுதோறும் எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது?

அ. ஜனவரி 20

ஆ. ஜனவரி 24

இ. ஜனவரி 5

ஈ. ஜனவரி 15

02. குடியரசு தினத்தையொட்டி, தமிழகக் காவல் துறையைச் சேர்ந்த எத்தனை போலீஸ் அதிகாரிகளுக்கு, ஜனாதிபதியின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்கப் பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன?

அ. 30

ஆ. 28

இ. 23

ஈ. 10

03. மத்திய அரசு சார்பில், கோல்கட்டா விமான நிலையத்தில் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ள, குறைந்த விலை உணவகத்தின் பெயர் என்ன?

அ. யாத்ரி உடான் கபே

ஆ. உடான் கபே

இ. உடான் யாத்ரி கபே

ஈ. யாத்ரி காபே

04. அமெரிக்கா கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும், எவ்வளவு கோடி ரூபாய் நிதி உதவியை, வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளது?

அ. ரூ.10.5 லட்சம் கோடி

ஆ. ரூ.5.8 லட்சம் கோடி

இ. ரூ.3.3 லட்சம் கோடி

ஈ. ரூ.5.5 லட்சம் கோடி

05. சமீபத்தில் மறைந்த, இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான கே.எம்.செரியன், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

அ. கேரளம்

ஆ. தமிழகம்

இ. ஆந்திரம்

ஈ. கர்நாடகம்

06. அனைத்து குடிமக்களுக்கும் சரிசமமான, சீரான சட்ட திட்டங்களை வகுக்கும், யு.சி.சி. எனப்படும் பொது சிவில் சட்டம், நாட்டிலேயே முதலாவதாக, எந்த மாநிலத்தில் சமீபத்தில் அமலுக்கு வந்தது?

அ. குஜராத்

ஆ. சட்டீஸ்கர்

இ. உத்தரகண்ட்

ஈ. மத்தியப்பிரதேசம்

07. தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்துக்கு வழிகாட்டும், என்ன பெயர் கொண்ட செயற்கைக்கோளை, இஸ்ரோவின், 'ஜி.எஸ்.எல்.வி. - எப்15' ராக்கெட், சமீபத்தில் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது?

அ. என்,என்.எஸ். - 04

ஆ. என்.வி.எஸ். - 02

இ. எஸ்.வி.எஸ். - 01

ஈ. எஸ்.எம்.எஸ். - 05

08. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில், 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் யார்?

அ. ஜஸ்பிரிட் பும்ரா

ஆ. முகமது சீராஜ்

இ. குல்தீப் யாதவ்

ஈ. ஹர்ஷித் ராணா

விடைகள்: 1. ஆ, 2. இ, 3. இ, 4. ஈ, 5. அ, 6. இ, 7. ஆ, 8. அ.






      Dinamalar
      Follow us