sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : மார் 24, 2025

Google News

PUBLISHED ON : மார் 24, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அதிகபட்சமாக எந்தத் துறைக்கு, ரூ.55,261 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது?

அ. சுகாதாரம்

ஆ. கல்வி

இ. காவல்

ஈ. பொதுப்பணி

2. நிலவை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்படும், 'சந்திரயான் 5' திட்டத்தில், எத்தனை கிலோ எடையுள்ள, 'ரோவர்' வாகனம் அனுப்பப்பட உள்ளதாக, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்?

அ. 300 கிலோ

ஆ. 600 கிலோ

இ. 250 கிலோ

ஈ. 450 கிலோ

3. ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான, சென்னை ஐ.சி.எப்.பில், எந்த ரயில்களில், இருக்கை வசதியுள்ள தயாரிப்பைக் குறைத்து, படுக்கை வசதியுள்ள தயாரிப்பை அதிகரிக்க, ஐ.சி.எப். நிர்வாகம் முடிவு செய்துள்ளது?

அ. வந்தே பாரத்

ஆ. எக்ஸ்பிரஸ்

இ. மெட்ரோ

ஈ. புல்லட்

4. இந்திய இசை, கலாசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், சிம்பொனி இசையை இயற்றியது அவரது இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிப்பதாக, எந்த இசையமைப்பாளர் குறித்து, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்?

அ. அமித் திரிவேதி

ஆ. அனில் பிஸ்வாஸ்

இ. ஏ.ஆர்.ரஹ்மான்

ஈ. இளையராஜா

5. இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் மிகப்பெரிய பணக்காரராக, ரூ. 3,400 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிர எம்.எல்.ஏ.வான பராக் ஷா, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்?

அ. நவநிர்மான் சேனா

ஆ. காங்கிரஸ்

இ. பாரதிய ஜனதா

ஈ. சுவராஜ்

6. தமிழ்ப் புத்தாண்டு முதல், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீடுதோறும் இலவசமாக வழங்கப்படும் என, எந்த யூனியன் பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணன் தெரிவித்துள்ளார்?

அ. லடாக்

ஆ. புதுச்சேரி

இ. சண்டிகர்

ஈ. டில்லி

7. தடகள போட்டியில், ஒரு மைல் தூர (1.6 கி.மீ.) ஓட்டப்பந்தயத்தில், இலக்கை 3 நிமிடம், 58.35 வினாடியில் கடந்து, 4 நிமிடங்களுக்குக் குறைவாகக் கடந்த இளம் வீரர் (15 வயது) என்ற சாதனையைப் படைத்துள்ள சாம் ரூத், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ. சுவிட்சர்லாந்து

ஆ. இந்தியா

இ. ஆப்பிரிக்கா

ஈ. நியூசிலாந்து

8. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுடன் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் யார்?

அ. ஆனி மெக்லின்

ஆ. புட்ச் வில்மோர்

இ. நிகோல் ஏயர்ஸ்

ஈ. தகுயா ஒனிஷி

விடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. ஈ, 5. இ, 6. ஆ, 7. ஈ. 8. ஆ.






      Dinamalar
      Follow us