sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : ஏப் 14, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. கடலூர் மாவட்டத்தில் விளையும் எந்த இரு உணவுப் பொருட்களுக்கு, மத்திய அரசு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது?

அ. கடலைமிட்டாய், தேன்குழல்

ஆ. முந்திரி, பலாப்பழம்

இ. அல்வா, அவல்

ஈ. தேன்மிட்டாய், பாதாம்

2. ராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்தில், அதிகபட்சமாக எத்தனை கி.மீ. வேகம் வரை ரயில்களை இயக்கலாம் என, மத்திய அரசு நியமித்த உயர்மட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது?

அ. 160 கி.மீ.

ஆ. 200 கி.மீ.

இ. 80 கி.மீ.

ஈ. 150 கி.மீ.

3. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது தேசியப் பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள எம்.ஏ.பேபி, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

அ. குஜராத்

ஆ. உத்தரப்பிரதேசம்

இ. கேரளம்

ஈ. சத்தீஸ்கர்

4. மகாராஷ்டிராவில், முகலாய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள குல்தாபாத் நகரத்தின் பெயர், என்னவாக மாற்றப்பட உள்ளதாக, அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது?

அ. சந்திரபூர்

ஆ. அமராவதி

இ. தானே

ஈ. ரத்னாபூர்

5. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஏழு வினாடிகளில் இதயப் பாதிப்புகளைக் கண்டறியும் செயலியை உருவாக்கியுள்ள,14 வயது சிறுவன் சித்தார்த் நந்தியாலா, இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

அ. ஆந்திரம்

ஆ. தமிழ்நாடு

இ. கேரளம்

ஈ. தெலங்கானா

6. இந்தியத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், சுற்றுலா பயணியர் அதிகம் செல்லும் இடமாக, எது முதலிடத்தில் உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது?

அ. ராமேஸ்வரம்

ஆ. ஊட்டி

இ. மகாபலிபுரம்

ஈ. தாஜ்மஹால்

7. இந்தியக் கடற்படையின் தாக்குதல் திறன்களை வலுப்படுத்த, பிரான்சிடம் இருந்து ரூ.63,000கோடி மதிப்பில், 26 எண்ணிக்கையில் எந்த ரக கடற்படை போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

அ. தேஜஸ்

ஆ. மிராஜ்

இ. ரஃபேல்

ஈ. அபாச்சி

8. மொனாக்கோவில் நடந்த, 'ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் 1000' சர்வதேச டென்னிஸ் தொடரில், ஒற்றையர் அல்லது இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்ற, உலகின் மூத்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளவர்?

அ. சுமித் நாகல்

ஆ. போபண்ணா

இ. மகேஷ் பூபதி

ஈ. சானியா மிர்ஸா

விடைகள்: 1. ஆ, 2. அ, 3. இ, 4. ஈ, 5. அ , 6. ஈ, 7. இ 8. ஆ.






      Dinamalar
      Follow us