
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்?
அ. பி.ஆர்.கவாய்
ஆ. சூர்யகாந்த்
இ. சஞ்சீவ் கன்னா
ஈ. பெலா திரிவேதி
2. கொரோனா தொற்று, இந்தியா - சீனா எல்லை பிரச்னையால், 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எந்த புனித யாத்திரை, ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் தொடங்க உள்ளது?
அ. புத்தகயா
ஆ. அமர்நாத்
இ. அமிர்தசரஸ்
ஈ. கைலாஷ் - மானசரோவர்
3. இந்தியாவின் முதல் ஏ.ஐ. மாடலை உருவாக்குவதற்காக, மத்திய அரசு தேர்வு செய்துள்ள நிறுவனத்தின் பெயர் என்ன?
அ. சர்வம் ஏ.ஐ.
ஆ. இன்ஃபோசிஸ்
இ. சென்சார் டெக்னாலஜி
ஈ. ஹேப்டிக்
4. தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டு, தற்போது மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளவர்?
அ. செந்தில் பாலாஜி
ஆ. மனோ தங்கராஜ்
இ. சேகர்பாபு
ஈ. துரைமுருகன்
5. சமீபத்தில், பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பிரபல சமையல் கலை நிபுணர் யார்?
அ. வெங்கடேஷ் பட்
ஆ. மாதம்பட்டி ரங்கராஜ்
இ. தாமு
ஈ. கெளசிக்
6. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளவர்?
அ. ஆகாஷ் அம்பானி
ஆ. ஈஷா அம்பானி
இ. அனந்த் அம்பானி
ஈ. அனில் அம்பானி
7. கனடா பார்லிமென்ட் தேர்தலில், லிபரல் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்?
அ. மார்ட்டின் பால்
ஆ. ஹார்பர் ஸ்டீபன்
இ. ட்ரூடோ ஜஸ்டின்
ஈ. மார்க் கார்னி
8. டில்லியில் நடந்த ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில், 83 தங்கம் உட்பட 87 பதக்கங்களை வென்ற அணி எது?
அ. ஜப்பான்
ஆ. இந்தியா
இ. சீனா
ஈ. ரஷ்யா
விடைகள்: 1. அ, 2. ஈ, 3. அ, 4. ஆ, 5. இ, 6. இ, 7. ஈ, 8. ஆ.