sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்!

நான்கில் ஒன்று சொல்!

நான்கில் ஒன்று சொல்!


PUBLISHED ON : மார் 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 23, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

1. ‛தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு, 2025ஆம் ஆண்டுக்கான, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எழுதியவர் யார்?

அ. க.கைலாசபதி

ஆ. ந.பிச்சமூர்த்தி

இ. ச.தமிழ்ச்செல்வன்

ஈ. சுந்தர ராமசாமி

2. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எந்த வகைப் பாத்திரங்களுக்கு, அக்டோபர் 1ம் தேதி முதல், ஐ.எஸ்.ஐ. தரச்சான்று கட்டாயம் என, பி.ஐ.எஸ். (இந்திய தர நிர்ணய நிறுவனம்) தெரிவித்துள்ளது?

அ. இரும்பு

ஆ. எவர் சில்வர்

இ. இண்டாலியம்

ஈ. அலுமினியம்

3. ஐந்து இந்திய மாநிலங்களில், வரும் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில், 294 தொகுதிகள் கொண்ட எந்த ஒரு மாநிலத்திற்கு, இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. மேற்குவங்கம்

இ. கேரளம்

ஈ. அசாம்

4. அனைத்து முட்டைகள் மீதும் இனி, உற்பத்தி செய்த நாள் காலாவதியாகும் நாள் ஆகியவற்றை, கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் குறிப்பிட வேண்டும் என, எந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது?

அ. தெலுங்கானா

ஆ. குஜராத்

இ. உத்தரப்பிரதேசம்

ஈ. கர்நாடகம்

5. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தனியாக பிரிந்து, ஆந்திரம் உருவாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, யாருடைய 58 அடி உயர வெண்கல சிலைலை அமராவதியில், முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் திறந்து வைத்தார்?

அ. சீதாராம ராஜூ

ஆ. பொட்டி ஸ்ரீராமுலு

இ. பிரகாசம் பந்துலு

ஈ. பிங்கலி வெங்கையா

6. பெங்களுருவில் நடந்த, இந்திய ஓபன் ஜம்ப்ஸ் போட்டியில், பெண்களுக்கான போல்வால்ட் பிரிவில், அதிகபட்சமாக 4.10 மீ. தாண்டி தங்கம் வென்ற தமிழக வீராங்கனை?

அ. பரணிகா

ஆ. சுப்ரியா

இ. கீர்த்தனா

ஈ. சுபாஷினி

விடைகள்: 1. இ, 2. ஈ, 3. ஆ, 4. இ, 5. ஆ, 6. அ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us