PUBLISHED ON : அக் 18, 2016

அ நிறம் | அளவு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் (Elements எலிமென்ட்ஸ்) கலக்கும்போது, அவற்றின் இடையே வேதிப்பிணைப்பு ஏற்படுகிறது. இந்தப் பிணைப்பு ஒரு சேர்மத்தை (Compound காம்பௌண்ட்) உருவாக்குகிறது. அப்படி உருவாகும் சேர்மம், சில நேர்வுகளில், அதன் அடிப்படை தனிமங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட குணங்களைப் பெறுகிறது. உதாரணம்: தனிமங்களான ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்கள் ஒன்றாகக் கலக்கும்போது கிடைப்பது திரவப் பொருளான நீர்! இத்தகைய வேதிப் பிணைப்பைப் பயன்படுத்தி, பல பயனுள்ள உலோக சேர்மங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை, கலப்பு உலோகம் (Alloy அலாய்) என்கிறோம். நவீன நாகரிகத்தின் வளர்ச்சிக்கு, கலப்பு உலோகங்கள் ஒரு பெரும் காரணமாக இருந்துள்ளன.
அவ்வாறு, சில முக்கியமான கலப்பு உலோகங்கள் எப்படி உருவாகின்றன எனப் பார்ப்போம்.
அட்டவணை
