sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : ஆக 12, 2024

Google News

PUBLISHED ON : ஆக 12, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

01. மாநிலங்கள், தங்கள் நலத்திட்ட உதவிகளுக்குத் தேவைப்படும் அரிசியை, யாரிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் என, மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்?

அ. மத்திய அரசு

ஆ. இந்திய உணவுக் கழகம்

இ. மாநில நுகர்பொருள் வாணிபக் கழகம்

ஈ. நுகர்பொருள் கழகம்

02. பாரிசில் நடக்கும் ஒலிம்பிக்கில், இந்திய ஹாக்கி அணி பங்கேற்ற போட்டியை நேரில் காண, எந்த மாநில முதல்வருக்கு, 'இசட் - பிளஸ்' பாதுகாப்பு வழங்க முடியாது என்பதால், மத்திய அரசு அனுமதி மறுத்தது?

அ. மாணிக் சாஹா - திரிபுரா

ஆ. ஸ்டாலின் - தமிழ்நாடு

இ. பகவந்த் மான் - பஞ்சாப்

ஈ. நிதிஷ்குமார் - பீஹார்

03. போர் விமானங்களில் இருந்து, வான் ஊர்திகளைத் தாக்கும் எந்த ரக ஏவுகணைகளைத் தயாரிக்க, 'பாரத் டைனமிக்ஸ்' நிறுவனத்திற்கு, இந்திய விமானப்படை ஒப்புதல் வழங்கியுள்ளது?

அ. பிரம்மோஸ்

ஆ. 200 அஸ்த்ராமார்க் - 1

இ. பிருத்வி - 2

ஈ. அக்னி - 3

04. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள, 42 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட, சகிகோபால் நிலக்கரிச் சுரங்கம், தமிழக மின்வாரியத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது?

அ. அசாம்

ஆ. சத்தீஸ்கர்

இ. கர்நாடகம்

ஈ. ஒடிசா

05. ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு, உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான மத்திய அரசு இணையதளத்தின் பெயர் என்ன?

அ. பரிவாஹன்

ஆ. விவேஹன்

இ. சத்ருஹன்

ஈ. வித்ருஹன்

06. தமிழகத்தில், பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாகப் பெயர் சேர்க்காதவர்கள், இந்த ஆண்டு எந்தத் தேதிக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என, பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பதிவாளர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்?

அ. டிசம்பர் 1

ஆ. டிசம்பர் 31

இ. நவம்பர் 10

ஈ. அக்டோபர் 20

07. நாட்டிலேயே உள்ள பெரிய துறைமுகங்களில் ஒன்றாகக் கருதப்படும், வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தமிழகத்தின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?

அ. கடலூர்

ஆ. கன்னியாகுமரி

இ. சென்னை

ஈ. தூத்துக்குடி

08. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் ஒலிம்பிக் தொடரில், ஹாக்கி போட்டியில் இந்திய அணி வென்ற பதக்கம் என்ன?

அ. வெண்கலம்

ஆ. வெள்ளி

இ. தங்கம்

ஈ. பிளாட்டினம்

விடைகள்: 1. ஆ, 2. இ, 3. ஆ, 4. ஈ, 5. அ, 6. ஆ, 7. ஈ, 8. அ.






      Dinamalar
      Follow us