
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
01. வான்வெளியில் இருந்து புவியைக் கண்காணிக்க, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சமீபத்தில் அனுப்பிய செயற்கைக்கோள்கள், புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிறைநிறுத்தப்பட்டன. இவற்றைச் சுமந்து சென்ற ராக்கெட்டின் பெயர் என்ன?
அ. பி.எஸ்.சி.வி. - கே3
ஆ. எஸ்.எஸ்.எல்.வி. - டி3
இ. பி.எஸ்.எல்.வி. - ஏ1
ஈ. எஸ்.எல்.வி. - டி5
02. அரியலூர் மாவட்டத்திலுள்ள எந்தப் பகுதியில், ராஜேந்திரசோழனின் வரலாற்றை உணர்த்தும் அருங்காட்சியகம் அமைக்கும் பணியில், தமிழகத் தொல்லியல், அருங்காட்சியகங்கள் துறையினர் ஈடுபட்டுள்ளனர்?
அ. சோழமாதேவி
ஆ. அழகாபுரி
இ. கங்கைகொண்ட சோழபுரம்
ஈ. கிளிமங்கலம்
03. கொங்கு மண்டலத்தின் வறண்ட பகுதிகளில் விவசாயம் செழிக்க, தமிழகத்தில் விவசாயத்திற்கான முதல் நீரேற்று திட்டம், சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. என்ன திட்டம் அது?
அ. சூலூர் -- பல்லடம்
ஆ. கோபி -- சத்தியமங்கலம்
இ. காங்கேயம் -- தாராபுரம்
ஈ. அத்திக்கடவு - அவிநாசி
04. 'தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகளுடன், உலகளவில் இந்தியா சிறந்து விளங்குகிறது' என, சமீபத்தில் பேசிய வெளிநாட்டுப் பிரபலம் யார்?
அ. பில்கேட்ஸ்
ஆ. எலன் மஸ்க்
இ. டொனால்டு டிரம்ப்
ஈ. கமலா ஹாரிஸ்
05. தமிழக அரசின் 50வது தலைமைச் செயலராக, புதிதாகப் பதவியேற்று உள்ளவர்?
அ. ஜீவானந்தம்
ஆ. முருகானந்தம்
இ. பாலகணபதி
ஈ. ராஜவேல்
06. உலகின் மிகவும் வலிமையான உணவு, பால் பொருட்களுக்கான பிராண்டுகள் பட்டியலில், இந்தியாவின் எந்த நிறுவனம், முதலிடம் பிடித்துள்ளதாக, பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது?
அ. ஆஷிர்வாத்
ஆ. ஆச்சி
இ. அமுல்
ஈ. பிரிட்டானியா
07. அமெரிக்க நாட்டின் மூன்றாவது உயரமான சிலை என்ற பெருமையைப் பெற்றுள்ள, 'ஸ்டேட்யூ ஆப் யூனியன்' என்று அழைக்கப்படும் யாருடைய 90 அடி உயர சிலை, டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் திறக்கப்பட்டது?
அ. ஹனுமன்
ஆ. திருவள்ளுவர்
இ. விவேகானந்தர்
ஈ. ராமர்
08. சர்வதேச 'டி-20' அரங்கில், ஒரே ஓவரில் 39 ரன்கள் விளாசி, உலக சாதனை படைத்த வீரர் டேரியஸ் விஸ்செர், எந்த அணியைச் சேர்ந்தவர்?
அ. ஆஸ்திரேலியா
ஆ. இங்கிலாந்து
இ. சமோவா
ஈ. செளத் ஆப்பிரிக்கா
விடைகள்: 1.ஆ, 2.இ, 3.ஈ, 4.அ,5.ஆ, 6. இ, 7.அ, 8.இ.