
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கெளன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில், 83.85 சதவீத இடங்கள் நிரம்பி, எந்த மண்டலம் முதலிடத்தில் உள்ளது?
அ. விழுப்புரம்
ஆ. கொங்கு
இ. சென்னை
ஈ. வேலூர்
2. இந்தியாவில், 2023 -- 2024 நிதியாண்டில், அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலில், முதலிடத்தில் (ரூ.92 கோடி) உள்ளவர் யார்?
அ. விராட் கோலி
ஆ. விஜய்
இ. ஷாருக்கான்
ஈ. தோனி
3. வங்கிகள், 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளுக்கு, மாதம் எவ்வளவு ரூபாய் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை விரைவில் தொடங்க பரிசீலித்து வருவதாக, இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் மேத்தா தெரிவித்தார்?
அ. ரூ.5,000
ஆ. ரூ.8,000
இ. ரூ.10,000
ஈ. ரூ.3,000
4. அனைத்து வகை பொருட்களும் ஒரே இடத்தில், மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும் வகையில், மாவட்டத்திற்கு தலா ஒரு மெகா ஸ்டோரைத் தொடங்க, தமிழக அரசின் எந்தத் துறை முடிவு செய்துள்ளது?
அ.ஜவுளி
ஆ.வேளாண்மை
இ.பொதுத்துறை
ஈ. கூட்டுறவு
5. மின்னணு துறையில் மிக முக்கிய தேவையான, செமிகண்டக்டர் தயாரிப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற, எந்த இரு நாடுகள் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளன?
அ. மொரீசியஸ், மெக்சிகோ
ஆ. சிங்கப்பூர், அமெரிக்கா
இ. பெலாரஸ், பெல்ஜியம்
ஈ. நெதர்லாந்து, பிரேசில்
6. சமீபத்தில், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்?
அ. அஷ்வின்
ஆ. ஜஸ்பிரிட் பும்ரா
இ. ரவீந்திர ஜடேஜா
ஈ. ரோஹித் சர்மா
7. எளிதாகத் தொழில் தொடங்க உகந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கான, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவரிசை பட்டியலில், எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
அ. தமிழகம்
ஆ. கேரளம்
இ. மத்தியபிரதேசம்
ஈ. ஒடிசா
8. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பாராலிம்பிக் போட்டியில், 'கிளப் த்ரோ' போட்டியில், தங்கம் வென்ற முதல் இந்தியர் எனச் சாதனை படைத்துள்ளவர்?
அ. தரம்பிர்
ஆ. மாரியப்பன்
இ. பீமாராவ்
ஈ. கிரிஷா
விடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. ஈ, 5. ஆ, 6. இ, 7. ஆ, 8. அ.