PUBLISHED ON : ஜன 01, 2024

ஊனுண்ணிகளான சிங்கம், புலி, ஓநாய் உள்ளிட்ட விலங்குகள் உணவுக்காக மான், முயல், அணில் உள்ளிட்ட இலையுண்ணிகளைத் துரத்தினால் அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடி தங்களது உயிரைக் காத்துக் கொள்ளும்.
ஆனால், மர இனம் ஒன்று, இலையுண்ணி விலங்குகள் தம்மை உண்ணாமல் தற்காத்துக் கொள்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?
ஆம்!
ஆஸ்திரேலியாவைப் பூர்விகமாகக் கொண்ட அகாசியா (Acacia) மரங்கள் தங்களை இலையுண்ணி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்கின்றன. இதற்காக இந்த மரங்கள் டானின் (Tannin) எனும் ரசாயனத்தைச் சுரக்கின்றன.
விலங்குகள் அருகே வந்தால் இந்த ரசாயனம் இதன் இலைகளில் பரவிவிடும். விஷத்தன்மை வாய்ந்த இந்த இலைகளை இலையுண்ணி விலங்குகள் சாப்பிட்டால் பாதிப்பு உண்டாகும். எனவே விலங்குகள் இந்த மரத்தின் இலைகளைச் சாப்பிடாமல் தவிர்த்துவிடும்.
எத்திலின் ரசாயனத்தைச் சுரக்கும் இந்த மரங்கள், 40 - 50 மீட்டர் தொலைவில் உள்ள தங்களது இன மரங்களுக்குக் காற்றில் பரவும் எத்திலின் மூலம் எச்சரிக்கும்.