
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உண்மை தெரியாமல் ராமு, பீட்டர் மீது கோபம் கொண்டான். இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று வைத்துக்கொள்வோம். இதை வேறு ஒருவர் வினா வாக்கியமாக மாற்ற வேண்டும்.
சரியான பொருள் தரும்படி எப்படி மாற்றலாம் என்று பார்ப்போம்.
சரியான இடத்தில் 'ஆ' என்கிற ஒலி சேர்ந்தால் இது வினா வாக்கியமாக மாறும்.
*உண்மை தெரியாமலா பீட்டர் மீது கோபம் கொண்டான் ராமு?
இப்படி மாற்றினால், 'உண்மை தெரிந்து (பீட்டர் மீது தவறு இல்லை என்றாலும்) பீட்டரை ராமு கோபிக்கலாம்' என்பது போல் பொருள் வருகிறது.
* உண்மை தெரியாமல் பீட்டரையா கோபித்தான் ராமு?இப்படிச் சொன்னால், 'உண்மை தெரியாவிட்டாலும், பீட்டரைத் தவிர வேறு எவரையும் கோபிக்கலாம்' என்று ஆகிறது.
* உண்மை தெரியாமல் பீட்டரைக் கோபித்தானா ராமு?
இதுதான் சரியாக உள்ளது.
எனவே, பொருள் தரும் ஓர் ஒலியைச் சேர்க்க, தகுந்த இடம் அறிந்து சேர்க்க வேண்டும்.

