PUBLISHED ON : ஏப் 22, 2024
1. சிம்பொனி கச்சேரி எங்கு, எப்போது முதன்முதலில் தொடங்கியது?
2. தற்போதுள்ள நவீன சிம்பொனி கச்சேரியின் முன்னோடி இசையமைப்பாளர் யார்?
3. சிம்பொனி கச்சேரிகளில் இடம்பெறும் முக்கிய இசைக்கருவிகள் என்னென்ன?
4. உலகப் புகழ்பெற்ற சில சிம்பொனி இசைக்குழுக்களின் பெயர்களைச் சொல்லுங்கள்...
விடைகள்
1. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலமான 15ஆம் நூற்றாண்டில் சிம்பொனி இசை, தற்போது கிரீஸ் நாடு அமைந்துள்ள இடத்தில் பிறந்தது. மூன்றுக்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள், கோரஸ் பாடகர்கள் இணைந்து குழு இசைக் கச்சேரி செய்ததை சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என அழைத்தனர்.
2. இத்தாலிய இசையமைப்பாளர் கிளவுடியோ மோட்டவர்டி, 1607 ஆம் ஆண்டு சிம்பொனி கச்சேரியை ஒழுங்குபடுத்தினார். 'ஆர்ஃபியோ' என்னும் தனது ஓப்ரா பாடலை சிம்பொனி கச்சேரியில் அரங்கேற்றினார்.
3. வயலின், வியோலா, செலோ, டபுள் பாஸ், ஹார்ப், ஆர்கன், பியானோ, டூஃபா, டிரம்ஸ், கிதார்
4. நியூயார்க் ஃபில்ஹார்மோனிக், பாஸ்டன், சிக்காகோ, பிலடல்ஃபியா, கிளீவ்லேண்ட் ஆர்கஸ்ட்ராக்கள் உலகப்புகழ் பெற்றவை. இன்றைய நவீன உலகிலும் மேற்கண்ட சிம்பொனி இசைக்குழுவின் கச்சேரிகளைக் கேட்க டிக்கெட்கள் விற்றுத் தீர்கின்றன.

