
மேற்கத்திய செவ்வியல் இசையை வழங்கும் குழுக்களுக்கு 'சிம்பொனி ஆர்கஸ்ட்ரா' என்று பெயர். இதில், பித்தளையால் (Brass) செய்யப்பட்ட காற்று இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும். எடை அதிகமுள்ள இந்தக் கருவிகளை வாசிக்கப் பல ஆண்டுப் பயிற்சி தேவை. பித்தளை இசைக் கருவிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்வோமா?
1. சிம்பொனி ஆர்கஸ்ட்ராக்களில் பிராஸ் கருவிகளின் பங்கு என்ன?நம்மூர் நாகஸ்வரம் போன்ற மேற்கத்திய காற்றிசைக் கருவிகளான பிராஸ் கருவிகள், இசையில் கம்பீரம், பிரமாண்டத்தை உண்டாக்கப் பயன்படுபவை. பிராஸ் கலைஞர்கள் இவற்றை வாசிக்கும்போது எழும் இசை பார்வையாளர்களுக்கு வியப்பை உண்டாக்கும்.
2. புகழ்பெற்ற பிராஸ் இசைக் கருவிகள் எவை?
பிரெஞ்சு ஹார்ன், டிரம்பெட், சாக்ஸபோன்.
3. உலகின் மிகப்பெரிய பிராஸ் கருவி எது?
டூபா.
4. பிராஸ் கருவிக் கலைஞருக்குத் தேவையான சிறப்பம்சங்கள் என்னென்ன?
பிராஸ் கலைஞர்கள் அடிவயிற்றில் இருந்து மூச்சுக் காற்றை வெளியேற்றி வாசிக்க வேண்டும். எனவே இவர்களுக்கு வலுவான நுரையீரல்கள், அடி வயிற்றுத் தசைகள் தேவை. பிராஸ் கலைஞர்களுக்குப் புகைப்பழக்கம் இருக்கக்கூடாது.
5. பிரபல பிராஸ் இசைக் கலைஞர்கள் யாவர்?
லூயீஸ் ஆம்ஸ்ட்ராங், லீ மார்கன், கிளிஃபார்டு பிரவுன்.