sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வரலாற்றுத் தடம்: கலிங்கத்தை வென்ற சோழன்

/

வரலாற்றுத் தடம்: கலிங்கத்தை வென்ற சோழன்

வரலாற்றுத் தடம்: கலிங்கத்தை வென்ற சோழன்

வரலாற்றுத் தடம்: கலிங்கத்தை வென்ற சோழன்


PUBLISHED ON : ஜூன் 03, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 03, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழ மன்னர் முதலாம் குலோத்துங்கன் சார்பில், கலிங்க நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார் அவரின் அமைச்சர் கருணாகரத் தொண்டைமான். இன்றைய ஒடிசா மாநிலம்தான், அன்றைக்குக் கலிங்கம் என்று அழைக்கப்பட்டது.

குலோத்துங்கன் காலத்தில் காஞ்சிபுரம், சோழர்களின் தலைநகர்களில் ஒன்றாக இருந்தது.

அங்கே பெரும்பாலான நாட்களில் குலோத்துங்கன் இருப்பது வழக்கம். ஒரு நாள், சோழ அரசிற்குக் கப்பம் செலுத்தாத அரசர்கள் பற்றிய விவரம் குலோத்துங்கனுக்குச் சொல்லப்பட்டது. அதில் ஒரு மன்னர் அனந்தவர்மன், கலிங்க நாட்டின் அரசர்.

சோழ நாட்டு இளவரசி ராஜசுந்தரியை மணம் புரிந்தவர்.

கப்பம் செலுத்தாத அனந்தவர்மனை அடக்குவது என்று முடிவு செய்தார் குலோத்துங்கன். உடனே படைகளுக்கு உத்தரவிட்டார். படைக்குத் தலைமை தாங்கியவர் கருணாகரத் தொண்டைமான். மலையரணால் சூழப்பட்ட கலிங்கத்தை வெல்வது எளிதல்ல என்று உணர்ந்த அரசன், பெரும்படையை அனுப்பினார்.

இரு பெரும் கடல்கள் மோதிக்கொள்வது போல், சோழர் படையும் கலிங்கத்துப் படையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அனந்தவர்மனுக்கு அவரின் அமைச்சர் எங்கராயன் ''அரசே, சோழநாட்டிற்குத் தரவேண்டிய கப்பத்தைக் கொடுத்து விடுங்கள். நாம் அவர்களை வெல்வது கடினம்'' என்று அறிவுரை கூறினார்.

ஆனால், அனந்தவர்மன் கேட்கவில்லை. முடிவில் மலையில் போய் ஒளிந்து கொள்ளும் நிலைமை அனந்த வர்மனுக்கு ஏற்பட்டது. அவரைத் தேடிப் பிடித்துக் காஞ்சிபுரத்துக்கு அழைத்து வந்தார் கருணாகரத் தொண்டைமான். பொன், பொருட்களுடன் யானை, குதிரை, ஒட்டகங்களும் கொண்டு வரப்பட்டன.

இந்தத் தகவல்களைக் கலிங்கத்துப் பரணி நூலின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. நூலை எழுதியவர் செயங்கொண்டார். குலோத்துங்கனின் மகன் விக்ரமசோழன் இளவரசனாக இருந்தபோது, கிழக்கு சாளுக்கிய நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தான்.

அப்போது கலிங்க நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் வீமன். அவரும் பிரச்னை செய்யவே, போரில் வீமனை வென்றான் விக்ரமசோழன்.

கி.பி. 1112ஆம் ஆண்டில் கலிங்கப் போர் நடந்தது. குலோத்துங்கன் ஆட்சிக் காலம் 1070 முதல் 1118 வரை. சோழர்களுடன் மண உறவு ஏற்பட்ட பிறகு, கலிங்க மன்னர்கள் தங்களைப் பெருமையுடன் சோ(ழ)ட கங்கா என்று அழைத்துக்கொண்டனர். புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் கோயிலை எழுப்பியவர் அனந்தவர்மன்தான்.

'சங்ககாலத்தில் கலிங்க நாட்டிலிருந்து ஆடைகள், தமிழ் நாட்டிற்கு வந்தன. கலிங்க நாட்டிலிருந்து வந்த பருத்தி ஆடைகளுக்குத் தமிழர்கள், 'கலிங்கம்' என்று பெயரிட்டனர். பிற்காலத்தில் பருத்தி ஆடைகளுக்கெல்லாம் பொதுப் பெயர் 'கலிங்கம்' என்றானது.

'ஆந்திர தேசத்துக்கு அப்பால் உள்ள கலிங்க தேசத்தின் பெயர், தமிழ்நாட்டில், தமிழ்மொழியில் கலிங்கம் என்னும் பொருட்பெயராக மாறிற்று என்பதைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும்' என்று வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனி வேடங்கடசாமி, தன்னுடைய 'ஆய்வுக் களஞ்சியம்' நூலில் குறிப்பிடுகிறார். கலிங்கம் அழிந்த நாளில், கலிங்கருக்குக் 'கலிங்கம்' (இடுப்பாடை) ஒன்றே மிஞ்சியது என்கிறது கலிங்கத்துப் பரணி.






      Dinamalar
      Follow us