PUBLISHED ON : செப் 16, 2019

அ நிறம் | அளவு
பிரிட்டனில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு 2 ஆண்டுகள் தங்கி இருந்து வேலை தேடலாம் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. சர்வதேச மாணவர்கள் நமது நாட்டையும், பல்கலைக்கழகங்களையும் கலாசார ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் வளம்பெறச் செய்வார்கள் என்றும், இது நாட்டிற்குப் பலனளிக்கும் ஒரு முடிவே என்றும் அந்நாட்டின் கல்வித்துறைச் செயலரான கவின் வில்லியம்சன் கூறியுள்ளார்.
