தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செல்லங்களின் செல்லங்கள்

செல்லங்களின் செல்லங்கள்

செல்லங்களின் செல்லங்கள்


PUBLISHED ON : ஜூலை 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விதவிதமாய் வீட்டில் பொம்மைகளை வாங்கிக்குவித்தாலும்கூட, விளையாடச் செல்லப்பிராணிகள் வேண்டும் என்பது குழந்தைகளின் விருப்பம். வளர்ப்புப் பிராணிகளை வைத்துக்கொஞ்சுவது அவர்களுக்கு விருப்பமானது. உங்களுக்குப் பிடித்த செல்லப் பிராணி எது என்று காஞ்சிபுரம், செவிலிமேடு, சுவாமி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம். உற்சாகத்தோடு அவர்கள் கூறிய கருத்துகள் இதோ…

ச.ஆகாஷ், 9ஆம் வகுப்பு

எங்க வீட்ல 'பெட்' எதுவும் வளர்க்கலை. ஆனா நாயோட விளையாடறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க ஃபிரண்ட் வீட்ல நாய்க்குட்டி வளர்க்கறாங்க. அவனோட வீட்ல போய் அந்த நாய்க்குட்டியோட விளையாடுவேன். ஜாலியா இருக்கும். ஆனா பெரிய நாய்களைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கும்.

ல.திரேகா, 9ஆம் வகுப்பு

எங்க வீட்ல நாய், பூனை வளர்க்கறோம். பூனை எங்க வீட்டுக்கு அதுவாவே வந்தது. தினமும் பால் வெச்சதும் எங்க வீட்டுலேயே தங்கிடுச்சு. பூனைக்குட்டிக்கு ஃபீடிங் பாட்டில்ல பால் ஊத்தித் தருவோம். அதேபோல நாய் கிட்டே விளையாடறது ரொம்பப் பிடிக்கும். எனக்கு 'ஹாம்ஸ்டர்' (வெள்ளை எலி) வளர்க்கணும்னு ஆசை. ஆனா அதுக்கான வாய்ப்புக் கிடைக்கல.

நா.அனுமித்ரா, 9ஆம் வகுப்பு

எனக்கு நாய்க்குட்டி பிடிக்கும். முதல்ல எங்க வீட்ல நாய் வளர்க்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் நான் கேட்டதால வாங்கிக் கொடுத்தாங்க. அது என்னோட அழகா விளையாடும். ரஸ்க் ஊட்டி விடுவேன். சாயங்காலம் படிக்கறதுக்கு முன்னாடி, அதுகூட விளையாடுவேன். மனசு இலேசாகிடும்.

சு.வி.குரு ஸ்ரீகணேஷ், 9ஆம் வகுப்பு

என்னோட செல்ல நாய் பேரு 'மேக்ஸ்'. அது ஹை பிரீட் வகையைச் சேர்ந்தது. அதுக்கு தினமும் பவுல்ல ஃபுட் போடுவேன். என் மேல தாவி ஏறி விளையாடும். கடிக்காது. புதுசா யாராவது வந்தா குரைக்கும். நாங்க தெரிஞ்சவங்கதான்னு அதுக்கு சைகை பண்ணா அப்புறம் குரைக்காது. நாயோட தினமும் விளையாடுவேன்; சந்தோஷமா இருக்கும்.

சி.ஹரிகிருஷ்ணா, 9ஆம் வகுப்பு

எனக்கு நாய் தான் ரொம்பப் பிடிக்கும். எல்லோரும் ஆண் நாய் தான் வளர்ப்பாங்க. நாங்க பெண் நாய் வளர்க்கறோம். அதுக்கு லக்கின்னு பேர் வெச்சிருக்கோம். அதோட பந்து விளையாடுவேன். பந்தைத் தூக்கிப் போட்டா எடுத்துட்டு வரும். அதுங்கூட ஹைட் அண்ட் சீக் விளையாடுவோம். அது போன மாசம் அழகா மூணு குட்டி போட்டுச்சி. இப்பல்லாம் குட்டிங்ககூட விளையாடறது ரொம்பப் பிடிச்சிருக்கு.

ச.காயத்ரி, 9ஆம் வகுப்பு

எனக்குப் பிடிச்ச செல்லப் பிராணிகள் கிளியும், பூனையும்தான். ரெண்டையுமே நாங்க வளர்க்கறோம். கிளி வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற மரத்துல இருக்கு. கிளி வீட்டுக்குள்ளே, என் கிட்டயே வரும். பயப்படாது. அதுக்கு நான் அரிசி, பழம் என் கையால தருவேன். அதே போல பூனையை நான் மடியில எடுத்து வெச்சு விளையாடுவேன். ஜாலியா இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us