தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஸ்டெஃபி கிராஃப் உடன் போட்டோகிராப்

ஸ்டெஃபி கிராஃப் உடன் போட்டோகிராப்

ஸ்டெஃபி கிராஃப் உடன் போட்டோகிராப்


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டெஃபி கிராஃப் பிறந்த தினம் ஜூன் 14

22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்!

07 விம்பிள்டன் ஒற்றையர்

06 பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர்

05 அமெரிக்க ஓபன்

04 ஆஸ்திரேலியன் ஓபன்

டென்னிஸ் (தட்டுப்பந்து அல்லது வரிப்பந்து என்று தமிழில் சொல்கிறார்கள்!) ரசிகர்களிடம் 'உங்களின் பொற்காலம் எது' என்று கேட்டால், குதிரைவால் முடி காற்றில் குதிக்க, அழகான சிரிப்புடன், நளினமாக விளையாடிய ஸ்டெஃபி கிராஃப் காலத்தைச் சொல்வார்கள்!

இவான் லென்டில், போரிஸ் பெக்கெர், ஆண்ட்ரே அகாசி என ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய டென்னிஸ் உலகில், கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் தன்னை நிலை நிறுத்தி வென்றவர் ஸ்டெஃபி!

மேற்கு ஜெர்மனியின் மன்ஹெய்ம் (Mannheim) நகரில் பிறந்தார். மூன்று வயதில் வீட்டிலேயே அவருக்கு டென்னிஸ் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார் அவருடைய தந்தை. நான்கு வயதில் டென்னிஸ் மைதானத்தில் பயிற்சி பெற்று, ஐந்து வயதில் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டார். அவர் சாதிப்பதற்கு ஏற்ற துறை இதுதான் என்பதால் 13 வயதில் இருந்து பள்ளிக்கு அனுப்பவில்லை பெற்றோர். வீட்டில் ஒரு ஆசிரியர் மூலம் கல்வி கற்றார்.

சிறு வயதில் அனுபவித்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, 1983ல் தொழில்முறையாக விளையாடத் தொடங்கினார். அப்போது, உலக டென்னிஸ் தர வரிசையில் அவரது இடம் 124. அதே ஆண்டு இறுதியில் 98, அடுத்த ஆண்டில் 22 என அதிரடியாக முன்னேறி, 1985ல் 6ஆவது நிலைக்கு உயர்ந்தார்.

பிரபல சாம்பியன்கள் மார்ட்டினா நவரத்திலோவா, கிறிஸ் எவர்ட் போன்றோருக்குச் சவாலாக மாறினார். அவர்களுடன் மோதி வெற்றி பெறவில்லை என்றாலும் இறுதிப் போட்டிகள் வரை முன்னேறினார்.

இவரது டென்னிஸ் ஆட்டம் 1987ல் உச்சத்தில் இருந்தது. ஆஸ்திரேலியன் ஓபன், டெக்சாஸ், சான் ஆன்டோனியோ போட்டிகளில் வென்றதோடு, மியாமி போட்டி பட்டத்தையும் 1988ல் பெற்றார். அந்த ஆண்டு நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இதன் மூலம் 'காலண்டர் இயர் கோல்டன் ஸ்லாம்' தகுதியைப் பெற்ற முதல் மற்றும் ஒரே டென்னிஸ் நட்சத்திரம் ஸ்டெஃபி!

'இவ்வளவு சாதனைகளா' என ஆச்சரியப்பட வைக்கும் ஸ்டெஃபி கிராஃப் உடன் ஒரு போட்டோகிராப் எடுத்து, அதில் ஆட்டோகிராப் வாங்க யாருக்குத்தான் ஆசை இருக்காது! கடின உழைப்பிற்கு பலன் நிச்சயம் இருக்கும் என்பதைத்தான் டென்னிஸ் விளையாட்டு மூலமாக ஸ்டெஃபி நமக்குச் சொல்லி இருக்கிறார்.

* இரட்டையர் போட்டிகளில் 11முறை வென்றுள்ளார். ஓய்வு பெறும்போது, 1999ல் உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருந்தார்.

* பிரபல டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசியை 2001ல் திருமணம் செய்துகொண்டார்.

* உலக மகளிர் டென்னிஸ் போட்டியில் 1986ல் முதன்முதலாகக் கலந்துகொண்டபோது, கிறிஸ் எவர்ட்டை தோற்கடித்தார். அதன் பிறகு, எவர்ட்டிடம் ஒருமுறைகூட தோற்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us