தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'ஆலைப் பால ஆக்கல் ஆலோ'

'ஆலைப் பால ஆக்கல் ஆலோ'

'ஆலைப் பால ஆக்கல் ஆலோ'


PUBLISHED ON : டிச 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆல மரத்தில் பழம் இருக்கும் வரை, பறவைகள் தன்னுடையவை என்று சொந்தம் கொண்டாடும். பட்டுப்போனால், எந்தப் பறவையும் அங்கு செல்லாது. அதுபோலவே மனிதர்களிடையே செல்வம் இருக்கும் வரை, சொந்தம் இருக்கும்; வறுமை வந்தால், யாரும் வர மாட்டார்கள் என்ற சமூக நிலையை மறைபொருளாக ஒரு பழம் பாடல் கூறுகிறது.

அந்தப் பாடல்:

'ஆல் இலை பூவும் காயும்

அளிதரு பழமும் உண்டேல்

சாலவே பட்சி எல்லாம்

தன்கிளை என்றே சாரும்

ஆலிலை ஆதி போனால்

அங்குந்திருப்பார் உண்டோ'

ஆல மரத்தை ஆண் மரம் என்றும், அரச மரத்தை பெண் மரம் என்றும் பேதம் பிரித்து வைத்துள்ளனர்.

ஆல மரத்திற்கு நிறைய விழுதுகள் இருப்பதால், கான்மரம். பழங்கள் நிறைய கொடுப்பதால், பழுமரம். பழமையானது என்பதால், தொன்மரம். சூழ்ந்து கவிழ்ந்திருப்பதால், வடமரம். பால் கசிவதால், பாலி. பூ மறைந்திருப்பதால், கோளி. புனிதமாகக் கருதுவதால், சிவமரம் என்ற பெயர்கள் உண்டு.

ஆடு, மாடு, பன்றி, அணில், வெளவால் போன்ற விலங்கு, பறவைகள் இதன் கனியை உண்ணும்.

இதன் இலையில் மனிதர்கள் உணவு வைத்து சாப்பிடுவார்கள் (தையல் இலை). தோரணமும் கட்டுவார்கள்.

பெட்டி, கதவு, நாற்காலி போன்றவை செய்வதற்கு, ஆலங்கம்பு பயன்படுகிறது. இதன் சுள்ளி, சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது.

'ஆலைப் பால ஆக்கல் ஆலோ' என்பது ஒரு பழமையான பாடல் வரி. எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், ஆலம் பழத்தை பலாப் பழமாக மாற்ற முடியாது என்பதே இதற்குப் பொருள்.

'வாவி உறை நீரும் வட நிழலும்' என்கிறது நீதிவெண்பா வரி. ஆலமரத்து நிழல்படிந்த குளத்து நீர் என்பது, இதன் பொருள். இங்கு வட நிழல் ஆலமரத்தைக் குறிப்பிடுகிறது.

'ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்ற தொடர், ஆலம் விழுதில் பல் துலக்கினால், பற்கள் பலப்படும் என்பதை விளக்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us