PUBLISHED ON : ஏப் 03, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை புறநகர் ரயில் நிலையங்களில், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய பத்து, 'சுவச் பாரத்' மறுசுழற்சி இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களை அதனுள் போட்டுவிட்டால், அவை நசுக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டுவிடும். மேலும், பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, பண வெகுமதியும் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளின் மேலாண்மை மேம்பட இது உதவும். பிளாஸ்டிக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்ட பின்னர், நார் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி, ஆடைகள், மளிகைப் பைகள் போன்றவை தயாரிக்கப்படும்' என்றார்.

