தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பாக்கெட்டில் பறக்கும் அணில்!

பாக்கெட்டில் பறக்கும் அணில்!

பாக்கெட்டில் பறக்கும் அணில்!


PUBLISHED ON : ஏப் 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

'காலையில் 9 மணிக்குள்ள வந்துடுங்க, சுகர் கிளைடர் தூங்கப் போயிட்டா எழுப்ப முடியாது” என்றார் ஹரிஷ். காலையில் அந்தப் பிரபலத்தைக் காண ஓடினேன். “சுகர் க்ளைடர் எங்கே?” என்று கேட்க, ஹரிஷ் பாக்கெட்டில் இருந்து 'க்ரு... க்ரு...' என்ற ஒலி கேட்டது; சுகர் க்ளைடர் வெளியே தலைநீட்டி எனக்கு 'ஹலோ' சொன்னது.

சுகர் க்ளைடர் இதன் தமிழ்ப் பெயர்?

இல்ல... இது, ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது. நம்மூர் ஆளுங்க சும்மா வேடிக்கையா 'பறக்கற அணில்'ன்னு சொல்லுவாங்க.

இதை வளர்க்கும் ஆசை எப்படி வந்தது?

மொபைல் போன் வாங்கிக் கொடுத்தா, படிப்புல கவனம் இருக்காதுன்னு அப்பா மறுத்துட்டாரு. சின்ன வயசுல லவ் பேர்ட்ஸ், மீன்கள் வளர்த்திருக்கேன். ஏதாச்சும் வித்தியாசமா, யார்கிட்டேயும் இல்லாததை வாங்கி வளர்க்கணும்னு யோசிச்சேன். அப்படித் தேடும்போது சுகர் க்ளைடர் பத்தி கேள்விப்பட்டு, வாங்கினேன். இப்போ எனக்கு இவன்தான் பெஸ்ட் ஃப்ரெண்ட்.

உங்க அம்மா என்ன சொன்னாங்க?

“டேய்! அணிலைப் போய் இவ்வளவு காசு கொடுத்து வாங்கி இருக்கே. நல்லா ஏமாந்திருக்கே”ன்னு திட்டினாங்க. அப்புறம் அதோடு விளையாடி இப்போ ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க.

கையில் தூக்கும்போது பயமா இல்லையா?

அய்யோ! முதல்ல தெரியாம வாங்கிட்டமோன்னு பயம் இருந்துச்சு. ரொம்ப பொறுமையா பழகினேன். வாங்கின புதுசுல எப்போ சாப்பிடும், எப்போ தூங்கும், எப்போ எழுந்திருக்கும் என, ஒவ்வொரு விஷயத்தையும் கவனிச்சுக் கத்துக்கிட்டேன். சந்தேகம் வந்தா, வாங்கின கடைக்குப் போன் செஞ்சு கேட்பேன்.

சுகர் கிளைடர் எப்படி தன் உணர்வுகளைக் காண்பிக்கும்?

அதுக்கு என்னோட வாசனை நல்லா தெரியும். வீட்டுக்கு வந்ததும், நான் இருக்கிற இடத்துக்கு மேலிருந்து கீழே குதித்து வந்து உட்காரும். உடல்மேல ஏறி சகஜமாக விளையாட ஆரம்பிச்சுடும்.

வேற என்ன சிறப்பு?

இது தன் குட்டிகளை வயிற்றுப்பக்கம் உள்ள பையில் வெச்சுக்கும். பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கும். இதுவே சின்னதுன்னா, இதோட 'பெளச்' எப்படி மெலிதா இருக்கும்? யோசிச்சு பாருங்க. மத்த உயிரினங்கள் மாதிரி குட்டிகள் இருக்கும்போது, நம்மகிட்ட கோபமா நடந்துக்காது. எப்பவும்போல அன்பாத்தான் நடந்துக்கும்.

என்ன சாப்பிடும்?

நறுக்கிய காய்கறிகள், பழங்கள், புழுக்களை விரும்பிச் சாப்பிடுவான்.

வீட்டுல வளர்க்கிறதுக்காக ஏதாச்சும் மாற்றம் செஞ்சிருக்கீங்களா?

கண்டிப்பா. என் அறையில் கட்டிலே கிடையாது, தரையிலதான் சின்ன படுக்கை போட்டு இருக்கேன். எங்கேயும் பொந்துகள் இல்லாமல், மறைஞ்சுக்க இடமில்லாமல் வைத்திருக்கிறோம். ஆக்டிவா இருக்கும் போது ஃபேன் போட மாட்டேன்.

முக்கியமாக சின்னச் சின்ன சாமான்கள் எதுவும் வெளியே இல்லாமல் பார்த்துப்போம். பிளாஸ்டிக் பொருட்களைக் கடிக்காமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. காலையில தூங்கும்போது கூண்டுக்குள் போய் தூங்கிடுவாங்க.

இப்போ எத்தனை சுகர் க்ளைடர்ஸ் வளர்க்கிறீங்க?

முதல்ல ஒண்ணுதான் வாங்கினேன். எல்லா நேரமும் வீட்டுல நான் இருக்கிறதில்ல. ராத்திரியில் மட்டும் கொஞ்ச நேரம் விளையாடுவேன்; அப்புறம் தூங்கிடுவேன். இவன்கூட இன்னொருத்தர் இருந்தா, என்னை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லை. அதனால இரண்டாவது வந்துச்சு. இப்போ இரண்டு, மூணு ஆகிடுச்சு. ஆமா, குட்டிகள் போட்டது. பராமரிக்க சிரமமா இருந்துச்சு. அதனால, ஒண்ணை மட்டும் வெச்சுக்கிட்டு, மீதியை எங்க நண்பர்களுக்குக் கொடுத்துட்டேன்.

இது உங்க வீட்டுக்கு வந்ததும், நடந்த மாற்றம் என்ன?

ஸ்கூல் படிக்கும்போது, பல பேர் என்னோட பேசவே மாட்டாங்க. தனியா சுத்திக்கிட்டு இருப்பேன். எங்க வீட்டுக்கு சுகர் கிளைடர் வந்ததிலிருந்து, பல பேருக்கு நான் நண்பனாயிட்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us