PUBLISHED ON : பிப் 12, 2018

ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷர் (Aberdeenshire) பகுதியைச் சேர்ந்தவர் புரூஸ் எனும் விவசாயி. அவரது கால்நடைப் பண்ணைக்குள் புலி ஒன்று புகுந்துவிட்டதாகக் காவல்துறைக் கட்டுப்பாட்டறைக்குத் தெரிவித்தார். ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் புலியைப் பிடிப்பதற்குத் தேவையான கருவிகளோடு பண்ணையை அடைந்தனர். புலி அசையாமல் அமர்ந்திருந்தது. அது எழுந்துபோகும் என கொஞ்சநேரம் காத்திருந்த காவல்துறையினர், மெதுவாக குரல் கொடுத்து விரட்டப் பார்த்தனர். ஆனால், அது அசையவில்லை. பின், வெளிச்சத்தை அதன் மீது பாய்ச்சி, உற்றுக் கவனித்த பின்னரே அது உண்மையான புலி இல்லை, வெறும் பொம்மை என்று கண்டறிந்தனர். “பொதுமக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம்; தகவல் கிடைத்த 45 நிமிடங்களுக்குள் யாருக்கும் ஆபத்தில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.” என்கின்றனர் ஸ்காட்லாந்து போலீசார்.