
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் நிதி சார்ந்த தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, முதலீடு தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, உலகத்திலேயே, மூன்றாவது பெரிய நிதி தொழில்நுட்பச் சந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தை, இந்தியா பிடித்துள்ளது. முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த தொகையில், பணப் பரிமாற்ற நிறுவனங்களில், 58 சதவீதமும் காப்பீடு தொழில்நுட்பத்தில், 13.7 சதவீதமும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக 'அக்சென்சர்' நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

