PUBLISHED ON : பிப் 11, 2019

ஔவையார் இயற்றிய 'கொன்றைவேந்தன்' பாடல் வரிகள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பொருளும் தரப்பட்டுள்ளன. பாடல் வரிகளுக்கான பொருத்தமான பொருளைக் கண்டுபிடிப்பது உங்களுக்கான பயிற்சி. முயற்சியுங்கள்.
1. கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல்
2. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
3. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
4. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
அ. பொருளைத் தேடிச் சேர்க்காமல், தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருப்பது துன்பத்தைத் தரும்.
ஆ. கோள்மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் செய்திகளைச் சொல்வது, காற்றில் நெருப்பு பரவுவது போல சிக்கலைத் தரும்.
இ. வாழ்வில் தாழ்வு நிலை வரும்போதும், மனம் தளராமல் இருந்தால் இழந்தவை அனைத்தும் கிடைக்கும்.
ஈ. ஒருவர் கூர்மையான அம்புகளை கையில் வைத்திருக்கும் வில்லாளி என்றாலும், தற்பெருமை பேசி சண்டையை வரவழைக்கக் கூடாது.
- தமிழ்மலை
விடை: 1. ஈ, 2. இ, 3.ஆ, 4 .அ
