உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 01, 2016

அ நிறம் | அளவு
நம்ம ஊர் 'கை வீசம்மா கை வீசு' மாதிரி ஹிந்தியில் சூப்பர் ஹிட் குழந்தைகள் பாடல் ஒன்று உண்டு. அது, 'மச்லீ ஜல் கீ ரானி ஹை' என்கிற பாடல். அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
மச்லி ஜல்கீ ரானி ஹை
ஜீவன் உஸ்கா பானி ஹை
ஹாத் லகாஓ தோ டர் ஜாயேகீ
பாஹர் நிகாலோ தோ மர் ஜாயேகீ
பானீ மே டாலோ தோ தைர் ஜாயேகீ
Machli jal ki rani hai
Jeevan uskaa pani hai
Haath lagaavo tho dar jayegi
Baahar laavo tho mar jayegi
Pani me daalo tho thair jayegi
இந்தப் பாடலின் சந்தத்திலேயே தமிழ் அர்த்தத்தையும் பார்ப்போம்…
நீரின் ராணி மீனாகும்
நீர்தான் அதற்கு உயிராகும்
கையால் தொட்டால் பயமாகும்
வெளியில் எடுத்தால் உயிர்போகும்.
நீருக்குள் விட்டால் நிம்மதி ஆகிடும்!
