PUBLISHED ON : ஜூன் 19, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம் ஆட்டிங்கல் பகுதியிலுள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் துறையில் பயிலும் மாணவர்களான ராஜீவ், பிரின்சி மற்றும் சுபின் ஆகியோர், தங்களது கடைசி வருட ப்ராஜக்டிற்காக, இந்த ரேஸ் காரை உருவாக்கியுள்ளனர்.
மாருதி 800 காருக்குரிய இன்ஜின் மற்றும் பிற பாகங்களை கடைகளில் வாங்கி, தேவையான மாறுதல்களைச் செய்து, பந்தயக் காரை உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்கச் செலவான 1.5 லட்சம் ரூபாயையும், இம்மாணவர்களே பல இடங்களில் பகுதி நேர வேலைகள் செய்து சம்பாதித்துள்ளனர். பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவியத்தொடங்கியதை அடுத்து, இராணுவத்திற்கு உதவக் கூடிய ஒரு வாகனத்தை தயார் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர் இந்த நண்பர்கள், அதற்குத் தேவையான பணம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக உள்ளனர்.