உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 09, 2018

அ நிறம் | அளவு
உருவத்தில் சிறிய கொசுவையும் ரேடார் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பதை, சீன விஞ்ஞானிகள் சாத்தியமாக்கியுள்ளனர். பீஜிங் தொழில்நுட்ப நிறுவன ஆய்வுக்குழுவினர் உருவாக்கியுள்ள இந்த ரேடாரின் உதவியோடு, 2 கி.மீ.க்கு அப்பால் பறக்கும் கொசுக்களையும் கண்டறிய முடியும். அந்தக் கொசுக்களின் இறக்கை அசைவின் வேகம், பாலினம் ஆகியவற்றையும் அறிய முடியும். 'கொசுக்களின் இடப்பெயர்வைக் கண்காணிப்பதன் மூலம், ஒழிப்பு நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ள முடியும். இதற்காக, ராணுவத் தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளோம். இத்தொழில்நுட்பம் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். இதற்காக 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.' என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
