PUBLISHED ON : பிப் 19, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கிவரும் தேசிய பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாப்பு மையத்தைச் (National Centre for Safety of Heritage Structures - NCSHS) சேர்ந்த ஆய்வாளர்கள், ராமேஸ்வரம் கோவிலை ஆய்வு செய்தனர். ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தின் வடக்குப் பகுதி சேதமடைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, அப்பகுதியின் உறுதித் தன்மையைக் கண்டறிய, இந்த ஆய்வாளர்கள் குழு வரவழைக்கப்பட்டது. ஆய்வுக்குப்பின் இக்குழுவின் அறிக்கையை வைத்தே, சேதமடைந்ததாகக் கருதப்படும் அப்பகுதியைப் புதுப்பிக்கும் பணிகள் அவசியமா என்பது தீர்மானிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.