PUBLISHED ON : ஆக 14, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெலங்கானா மாநிலத் தலைநகரான ஐதராபாத் அருகில், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலைநயமிக்க ஆபரணங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, தெலங்கானா தொல்லியல் துறை இயக்குனர் கூறும்போது, 'நர்மெட்டா பகுதியில் பலகட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் எலும்புகளால் செய்யப்பட்ட கலைநயமிக்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. கடந்த 100 ஆண்டுகளில், தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில், இதுபோன்று மிகநேர்த்தியான அளவுகளுடன் செய்யப்பட்ட ஆபரணங்களைப் பார்த்ததில்லை. மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் உருவங்கள் பதித்த அபூர்வமான கேப்ஸ்டோன் கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகு ஆபரணங்கள் இங்கு கிடைத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது' என்றார்.