தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நிஜ விளையாட்டுகளே சிறந்தது

நிஜ விளையாட்டுகளே சிறந்தது

நிஜ விளையாட்டுகளே சிறந்தது


PUBLISHED ON : பிப் 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தற்போது எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டுகளிலேயே மாணவர்கள் மூழ்கிக் கிடப்பதாக ஒரு பேச்சு உள்ளது. ஆனாலும் விடுமுறை விட்டால் நகரின் அனைத்து மைதானங்களும் மாணவர்களால் கலகலக்கின்றன. இன்றைய மாணவர்களின் மனமறிய, எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டு, நிஜ விளையாட்டு எது சரியானது? என்று கேள்வி கேட்டிருந்தோம். சென்னை, இராயப்பேட்டை, வெஸ்லி மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பதிலறிய நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ:

கோ. பார்த்திபன் (8ஆம் வகுப்பு)

மைதானத்தில் விளையாடும்போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாற்பதிலும் இருபது வயது போலத் தோன்றுவோம். என்றும் இளமையாக இருக்க, நிஜ விளையாட்டுகள் தான் சிறந்தவை. உடம்பு சுறுசுறுப்பாக இருந்தால் நம் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். இந்த இரண்டின் நலத்திற்காக நாம் மைதானத்துக்குத்தான் வரணும்.

ந. முகம்மது அக்ரம் (8ஆம் வகுப்பு)

விளையாட்டு என்பதே ஆதிகாலத்தில் உழைத்து சோர்ந்த மனிதன் உற்சாகமாக இருப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்வார்கள். சோர்வு நீங்க வேண்டும் என்றால், ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடினால் எப்படி? ஓடியாடி விளையாட வேண்டும். அதற்குத்தான் நம் நாட்டில் கபடி, ஹாக்கி மாதிரி ஓடியாடும் விளையாட்டுகள் உள்ளன. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மைதானத்தில் இறங்கி, விளையாடுவதுதான் சிறந்தது.

ச.தீபக் (7ஆம் வகுப்பு)

உட்கார்ந்து விளையாடுவதைவிட, ஸ்கூல் கிரவுண்டில் வியர்வை வெளியேற விளையாடினால் உடல் கொழுப்பு குறையும். மாணவப் பருவத்தில் பலர் அளவுக்கு அதிகமாக குண்டாக இருப்பதற்குக் காரணமே, எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டுகளில் மூழ்குவதுதான். ஒபிசிடி பிரச்னை தீரவேண்டுமெனில், மைதானத்தில் ஒரு மாசம் விளையாடினாலே உடல் ஸ்லிம் ஆகும்.

லோகேஷ்வரன் (7ஆம் வகுப்பு)

எலக்ட்ரானிக்ஸ் கேம்ஸ் விளையாடும் போது நமது அறிவுத்திறன் அதிகரிக்குது. இந்த மாதிரி கேம்ஸில் சின்னச் சின்னதாக நிறைய திருப்பங்கள் இருக்கும். அதனால நாம நல்லா சிந்திச்சுத்தான் விளையாட முடியும். இன்னும் சொல்லப்போனால், ரேஸ் விளையாட்டுகளைத் த்ரில்லாக விளையாடினாலும் நமக்கு அடி ஏதும் படாது. பாதுகாப்பாக விளையாடலாம்.

ரா. சாய் பிரசாத் (7ஆம் வகுப்பு)

வீடியோ கேம்ஸ் எல்லாம் அந்தக் காலம். இன்னிக்கு நிறையப்பேரு ஸ்மார்ட் போனில் கேம்ஸ் ஆப்ஸ் வச்சுகிட்டு விளையாடுறாங்க. இது கண்பார்வையைக் கெடுத்து விடும். மாணவப் பருவத்திலேயே பலர் இன்னிக்கு கண்ணாடி போடும் நிலை ஏற்படுதுன்னா.. அதுக்கு எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டும் ஒரு முக்கியக் காரணம். மாறாக கிரவுண்டுல விளையாடும் நிஜ விளையாட்டுகளே சிறந்தது.

எல்.ராகேஷ் (7ஆம் வகுப்பு)

எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டுகளில் பல வெரைட்டி உண்டு. மூளைக்கு வேலை, சாகச விளையாட்டு, ரேஸ் விளையாட்டுன்னு பல இருக்கு. வீட்டுக்கு அருகில் மைதானம் இல்லாதவங்க எங்கே போய் விளையாடுவாங்க? அவங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டுகள் வரம். ஓர் ஆள் உட்காரும் அளவுக்கு இடம் போதும். உலகம் முழுக்க இதற்கு நல்ல வரவேற்பும் இருப்பதால்தான், புதுசு புதுசாக கேம்ஸ் வந்துகிட்டே இருக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us