PUBLISHED ON : அக் 14, 2019
ஜூலை 2018. எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபி அகமது, பக்கத்து நாடான எரித்தீரியா வின் அதிபரான அஃப்வெர்கியை ஆரத் தழுவிக்கொண்டார். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான், அபி அகமது, எத்தியோப்பியாவின் பிரதமர் ஆகியிருந்தார். அந்த அணைப்பில் ஆயிரம் செய்திகள் இருந்தன.
20 ஆண்டுக் கால உள்நாட்டுப் போர் அன்றோடு முடிவுக்கு வந்தது.எரித்தீரியாவின் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முகாந்திரம் அது.
உலகமே சற்று திரும்பிப் பார்த்து அசந்துபோனது. வெறும் 41 வயதான ஒரு மனிதர் எப்படி இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தினார்? என்ன துணிச்சல் இந்த மனிதருக்கு?
ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் இருசிறிய நாடுகள் தான் எத்தியோப்பியாவும் எரித்தீரியாவும். ஏழை நாடுகள்.
எத்தியோப்பியாவின் ஆளுகைக்குக் கீழேதான் எரித்தீரியா இருந்தது. 1993இல் எரித்தீரியா, எத்தியோப்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, சுதந்திர நாடானது. இந்தச் சுதந்திரம் சும்மா வந்தது அல்ல . 30 ஆண்டுப் போராட்டம்.
ஆனால், இந்தச் சுதந்திரம் நீடிக்கவில்லை . ஐந்தே ஆண்டுகளில், மீண்டும் எத்தியோப்பியாவும் எரித்தீரியாவும் மோதிக் கொண்டன.
காரணம், இருநாட்டுக்கும் எல்லையில் இருந்த 'பாட்மே ' என்ற நகரம் தான்.
அது யாருக்குச் சொந்தம் என்பதில் இரு நாடுகளும் மோதிக் கொண்டன.
இத்தனைக்கும் அந்த நகரத்தில் ஒன்றும் பெரிய வளமில்லை . ஆனால், மோதல் போராக வெடித்தது. இரண்டு தரப்பிலும் இழப்புகள். 80 ஆயிரம் பேர் பலியாயினர். மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். அதுவும் எரித்தீரியர்கள் ஐரோப்பாவுக்கு தஞ்சம் புகத் தொட ங்கினர்.
2000ஆம் ஆண்டில், ஒரு திருப்பம் நடந்தது. இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. எல்லைப் பகுதி தொடர்பான பிரச்னையைத் தீர்க்க , ஒரு குழு போடப்பட்டது. 2002 ஏப்ரலில் இந்தக் குழு தன் முடிவை அறிவித்தது.
'பாட்மே ' நகரம், எரித்தீரியாவுக்கே சொந்தம் என்றது. எத்தியோப்பியா ஏற்றுக் கொள் ளுமா?
'பாட்மே ' நகரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டியது எத்தியோப்பியா. விளைவு, தொடர்ச்சியாக எல்லைப் பகுதியில் பதற்றம். இருநாடுகள் இடையே யான முரட்டுத்தனமான பிடிவாதத்தால், பாதிக்கப்பட்டது மக்கள் தான். மனித உரிமை மீறல்கள் அதிகமாயின.
இந்நிலை யில் தான், 2018இல், 41 வயதே ஆன, இராணுவ அதிகாரியான அபி அகமது, எத்தியோப்பியாவின் பிரதமர் ஆனார். மூன்றே மாதத்தில், நேரே எரித்தீரியாவின் அதிபரைப் போய் பார்த்து, ஆரத் தழுவிக் கொண்டார்.
பிடிவாதம் வேண்டாம், மோதல் வேண்டாம், உயிரிழப்புகள் வேண்டாம், மக்களின் துன்பங்கள் வேண்டாம் என்று மனிதாபிமானத்தோடு முடிவெடுத்தவர் அபி அகமது.
2000இல் செய்துகொ ள்ளப்பட்ட இருநாட்டு ஒப்பந்தத்தை அப்படியே பின்பற்றுவதாகவும் தெரிவித்தார் அபி.
ஒரு சின்ன மாறுதல் தான். மனமாற்றம் தான். அதனால், உலகமே வியந்து போனது. அந்த பரந்த மனப்பான்மைக்கும், மக்களின் துன்பம் கண்டு இரங்கிய பெரிய மனசுக்கும் நோபல் பரிசுக்குழு 'அமைதிப் பரிசு' கெளரவம் செய்திருக்கிறது.
''இந்தப் பரிசை ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சமர்ப்பிக்கிறேன், இது எங்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும்''
