தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாபகம் வருதே!

ஞாபகம் வருதே!

ஞாபகம் வருதே!


PUBLISHED ON : ஆக 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படித்தது விரைவில் மறந்து விடுகிறது; ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் 'மூளையின் ஞாபக சக்தி குறைவு' என்று நம்மில் பலர் முடிவு கட்டிவிடுகிறோம்.

ஆனால் கணினியில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்கைப் போல நமது மூளையைக் கற்பனை செய்து கொண்டால், நமது மூளையின் சேமிப்பு திறன் சுமார் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் 'டெரா பைட்'வரை (Terrabyte) என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இரண்டாயிரம் 'டெராபைட்' திறன் கொண்ட ஒரு ஹார்ட் டிஸ்கில் 30 லட்சம் மணி நேர வீடியோவைப் பதிந்து வைக்கலாம். நிறுத்தாமல் ஓட்டினால் இவ்வளவு வீடியோவைப் பார்த்து முடிக்கவே 300 ஆண்டுகள் ஆகும்.

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் கணினியின் ஹார்ட் டிஸ்க் 500 'ஜிகா பைட்' திறன் கொண்டது என்று வைத்துக்கொண்டால், நமது மூளை ஏறத்தாழ 5,000 கணினிகளுக்கு நிகரானது.

ஒரு விஷயத்தை நாம் ஊன்றிக் கவனித்தால்தான் அந்த விஷயம் நமது மூளையில் பதியும்.மேலும் அந்த விஷயத்தில் நமக்கு நாட்டமும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த விஷயம் நமது மூளையில் தற்காலிகமாகப் பதிந்து, பிறகு அழிந்துவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us